சென்னை, ஜூன் 8 தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேற்று (7.6.2022), சென்னையில் பெண் தொழில் முனைவோருக்கான விருதுகள் பெற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல், தகவல் தொடர்பு, பிராண்ட் மேலாண்மை, நிகழ்ச்சி ஏற்பாடு போன்ற சேவைகளை மேற்கொண்டுவரும் பிராண்ட் அவதார் நிறுவனம், வீட்டிலிருந்தே பெண்கள் மேற்கொள்ளும் தொழில்முனைவு முயற்சிகளை அங்கீகரிக்க நிறுவிய விருது இதுவாகும்.
ஆர்வமாக தொழில்முனைவை வீட்டிலிருந்தே மேற்கொண்டுவரும் பெண்களை அங்கீகரித்து கொண்டாட ஒரு தளமாக ‘சக்தி மசாலா சுயசக்தி விருதுகள் 2022’ உருவாக்கப்பட்டுள்ளது. இல்லத்திலிருந்தே சம்பாதிக்கும் பெண்கள், விவசாயம், மருத்துவம், சில்லறை விற்பனை, கலை - கலாசாரம், விளையாட்டு - ஃபிட்னெஸ், உணவு - பானங்கள், டிஜிட்டல், உடல் ஆரோக்கியம், கல்வி - இலக்கியம், ஊடகம் - பொழுதுபோக்கு, சமூகநலன் - மாற்றுத்திறனாளி, வீட்டுத் தொழில்முறை சேவையாளர்கள், தொழில்நுட்பம் ஆகிய 13 பிரிவுகளின் கீழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
<https://homepreneurawards.com> / www.suyasakthiawards.com <http://www.suyasakthiawards.com> என்ற இணையதளத்தில் சுயசக்தி விருதுக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். கடைசித் தேதி 2 ஜூலை 2022 ஆகும்.
No comments:
Post a Comment