பெரியார் எனும் ஊசியைப் போட்டு காவிக் கிருமிகளை அழிக்க முடியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

பெரியார் எனும் ஊசியைப் போட்டு காவிக் கிருமிகளை அழிக்க முடியும்

சுரண்டை பொதுக்கூட்டத்தில்  தமிழர் தலைவர் எழுச்சியுரை

சுரண்டை, ஜூன் 11-  சுரண்டை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அருகில் நேற்று (10.6.2022) மாலை நடைபெற்ற மாநில உரிமை மீட்பு விளக்க பொதுக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமை வகித்தார். நெல்லை மண்டல செயலாளர் அய்.இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

ப.க.மாநில அமைப்பாளர் ச.குருசாமி, நகர தி.மு.க. செயலாளர் வே.ஜெயபாலன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அ.சவுந்திரபாண்டியன், ம.தி.மு.க.மாவட்ட பொருளாளர் சு.இராமகிருஷ்ணன், நெல்லை மண்டல மாணவர் கழக  செயலாளர் இனியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல பிரச்சாரக்குழு செயலாளர் சீ.டேவிட் செல்லத்துரை தொடக்கவுரையாற்றினார்.

மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் சிறப்புரை

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 35 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே பேசியிருக்கிறோம்.மீண்டும் இப்போது வந்திருக்கிறோம். மீண்டும் மீண்டும் இதுபோன்று அனைவரும் ஒருங்கிணைந்து இதுபோன்று கூட்டங்களை நடத்த வேண்டும். அப்படி நடத்தினால்தான் காவிகளுக்கு பெரியாரின் ஊசியை போட்டு காவிக் கிருமிகளை அழிக்க முடியும். இங்கே தி.மு.க. ம.தி.மு.க. வி.சி.க. ஆதித்தமிழர் பேரவை என எல்லோரும் கொள்கைப் பூர்வமாக இணைந்து பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே மேடையில் ஒரே வழக்குரை ஞர்களாக இருக்கிறோம் என்றால் அதுவும் சட்டம் இயற்றக் கூடிய அளவிற்கு இருக்கிறோம் என்றால் திராவிட இயக்கம் செய்த சாதனைதானே? 

குலக்கல்வித் திட்டம் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? ஆடு மேய்க்கவும்,  மாடு மேய்க்கவும் கையில் பிடித்த கோலை, எழுது கோலாக மாற்றியது திராவிட இயக்கம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆம். திராவிட இயக்கம் கற்கோட்டை. - கண்ணாடிக் கோட்டையில் உள்ளவர்கள் முட்டிப் பார்க்கக் கூடாது‌. இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றோர்

இந்தப் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், ப.க. மாநில எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு, மும்பை மாநில ப.க. தலைவர் அ.இரவிச்சந்திரன், தி.மு.க.தென்காசி மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் ஆலடி எழில் வாணன், வி.சி.க. மாவட்ட செயலாளர் டேனியல் அருள்சிங், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலிவர்ணன், திராவிட தமிழர் கட்சி மாநில செயலாளர் கதிரவன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், வி.சி.க.மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வெற்றி விஜயன், ஜெயக்குமார், இராமச்சந்திரன், கடற்கரை, அன்பழகன், செல்லத்துரை, சீனித்துரை, சிவனுபாண்டியன், அழகுசுந்தரம் கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய தி.மு.க.நிர்வாகிகள் சுப்பிரமணியம், பூல்பாண்டியன், சங்கர் நயினார், பரமசிவம், கோமதிநாயகம், முத்து சுப்பிரமணியம், சுதன் ராஜா, பிரம்மா மாரியப்பன், கார்த்திக், செய்தி மாடசாமி, சங்கரேஸ்வரன், மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் த‌.சீ.இளந்திரையன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் 

கோ.வெற்றிவேந்தன், தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர் கோபால், மாவட்ட இளைஞரணி செயலாளர் சண்முகம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தென்காசி மாவட்ட செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

தென்னங்கன்றுகள் வழங்கல்

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நகர செயலாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

பகுத்தறிவாளர் கழக 

புதிய பொறுப்பாளர்கள்

தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக  மாவட்ட செயலாளராக ஆலடி எழில்வாணன், மாவட்ட அமைப் பாளராக சுரண்டை வே.ஜெயபாலன் ஆகியோரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்.


No comments:

Post a Comment