சிதம்பரம், ஜூன் 9- சிதம்பரம் நடராஜர் கோவிலில் சொத்து கணக்குகளை ஆய்வு செய்வதற்காக சென்ற இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் கீழ வீதி கோயில் வாயிலில் நேற்று (8.6.2022) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎம் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந் திரளாகக் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கோயில் சொத்து கணக்கை காட்ட மறுக்கும் தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும், இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதைக் கண்டித்தும், கோவிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியும் முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment