அவருக்கு உற்ற துணையாக இருப்பதுதான் தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை!
இந்தி எதிர்ப்பு மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., எழுச்சியுரை
சென்னை, ஜூன் 10 தந்தை பெரியாரின் உண்மையான கருத்தியல் வாரிசு, அய்யாவின் உண்மையான போர்க் குணத்தின் வாரிசு நம்முடைய தமிழர் தலைவர் அவர் கள். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கிறார். அவருக்கு உற்ற துணையாக இருப்பதுதான், தமிழர்கள் ஒவ் வொருவரின் கடமை என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் எம்.பி., அவர்கள்.
இந்தி எதிர்ப்பு மாநாடு
கடந்த 4.6.2022 அன்று மாலை சென்னை சைதாப் பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பார்ப்பனரல்லாதவரின் ஆதரவு தேவை!
ஆகவே, தங்களைத் தற்காத்துக் கொள்ளவேண்டும்; ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டும். அதற்குப் பார்ப்பனரல்லாதவரின் ஆதரவு தேவை. அவர்கள் வரையில் அதை விரிவுபடுத்திக் கொள்வது என்பதற்கான ஒரு கோட்பாடாக, பரிணாமம் பெறச் செய்துவிட்டார்கள்.
சனாதனம் என்பதுதான் பார்ப்பனியம்; பார்ப்பனியம் என்பதுதான் இன்றைக்கு இந்துத்துவம் என்கிற பரி மாணத்தை, இன்னொரு பரிமாணத்தையும் அடைந் திருக்கிறது.
அதனால்தான் அவர்கள் பார்ப்பனரல்லாதாரை குறி வைத்து காய்களை நகர்த்துகிறார்கள். அவர்களைக் குறி வைத்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகிறார்கள். அவர் களைக் குறி வைத்து கட்சியிலும், ஆட்சியிலும் பதவி, பவிசுகளை வழங்குகிறார்கள்.
பாருங்கள், நாங்கள் இப்படியெல்லாம் அதிகாரம் தந்து அவர்களை அரவணைக்கிறோம்.
இந்தத் தேசத்தை ஒரே தேசமாக்கவேண்டும். அந்த தேசம் இந்துக்களின் தேசமாக அதிகாரப்பூர்வமாக நிலை நிறுத்தப்படவேண்டும்.
இதுதான் அவர்களுடைய அல்டிமேட் எய்ம் - இறுதி நோக்கம் என்பது. இதுதான் அவர்களது டார்கெட்.
ஆகவே, இந்தத் தேசத்தை ஒரே தேசமாக ஆக்க வேண்டுமானால், ஒரே கலாச்சாரம் தேவைப்படுகிறது. பன்மைத்துவ கலாச்சாரம் உள்ள ஒரு நாட்டை, ஒரு நாடு என்ற உணர்வுக்குள் கொண்டுவர முடியாது.
இந்த நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்க வேண்டும்
ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்று இவர்கள் முழங்குகிறார்களே, இது எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் எண்ணிப் பார்க்காமல் கடந்து போகி றோம். இந்த முழக்கத்தை வைத்தபொழுதே, இந்த நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கவேண்டும்.
இது ஒரு நாடுதானே என்று அண்ணன் முத்தரசன் அவர்கள்கூட சொன்னார்.
இல்லை, இது ஒரு நாடாக இல்லை என்பது அவர் களுக்குத் தெரிகிறது; நாம்தான் மயக்கத்தில் இருக்கி றோம்; இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்று நம்புகி றோம்.
இது ஒரு நாடு என்கிற உணர்வைப் பெற்றிருக்க வில்லை. மொழி அடிப்படையில் பிராந்திய உணர்வு மேலோங்குகிறது. மொழி உணர்வு மேலோங்குகிறது; மொழி உரிமை மேலோங்குகிறது. மாநில உரிமை என்கிற குரல் மேலோங்குகிறது.
எனவே, இது ஒரு நாடு என்கிற உணர்வை இவர்கள் பெற்றிருக்கவில்லை. எனவே, மொழி உணர்வை முனை மழுங்கச் செய்யவேண்டும். மொழி உரிமைப் போராட் டங்களை நசுக்கவேண்டும்; பிராந்திய உணர்வை நசுக்க வேண்டும். பிராந்திய உணர்வுகள், மொழி உணர்வு அல்லது மாநில உரிமைகள் என்பவை ஒரு தேசம் என்கிற உணர்வைத் தராது என்பதை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள் தெளிவாக உணர்ந்திருக் கின்றன. ஒரு தேசமாக இல்லை.
பெரியார் காலத்திலே அது தெளிவுபடுத்தப்பட்டது. இந்த மண்ணில் இரண்டு இனம்தான்; இரண்டு கருத் தியல்தான். இந்த இரண்டு கருத்தியல்களுக்கு, இரண்டு கோட்பாடுகளுக்கு நடைபெறுகிற யுத்தம்தான் இந்திய வரலாறு.
வருணாசிரம தர்ம கோட்பாட்டுக்கு
எதிரான சொல் திராவிடம்
ஒன்று ஆரியம்; இன்னொன்று திராவிடம்.
திராவிடம் என்கிற சொல்லாடல், நிலப்பரப்பைக் குறிப்பதற்காகக் கையாளப்பட்டதல்ல.
திராவிட நாடு என்கிற கோரிக்கை, நிலப்பரப்பு அடிப் படையில் கையாளப்பட்டது என்றாலும்கூட, திராவிடம் என்கிற சொல்லாடல், ஆரியம் என்கிற கருத்துக்கு எதி ரான கருத்தியல். பார்ப்பனியம் என்கிற கோட்பாட்டுக்கு எதிரான கோட்பாடு. வருணாசிரம தர்ம கோட்பாட்டுக்கு எதிரான சொல் திராவிடம்.
திராவிடம் என்பது கருத்தியல் சார்ந்த ஒரு சொல் லாடல். திராவிடம் என்று சொன்னாலே, அது பார்ப்பனிய எதிர்ப்பு என்றுதான் பொருள். ஒரு நிலப்பரப்பைக் குறிக்கின்ற சொல் அல்ல. தென்னிந்திய நிலப்பரப்பை இந்த 5, 6 மாநிலங்கள் மட்டும் குறிக்கின்றன என்றால், அவன்தான் தெலுங்கனாகப் போய்விட்டான்; இவன் தான் கன்னடனாகப் போய்விட்டான்; இவன்தான் மலையாளியாகப் போய்விட்டான்; அப்புறம் எதற்கு நமக்கு திராவிடம் என்று சில அற்பர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அரசியல் அறியாமையால் அந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள்.
திராவிடம் என்பது நிலப்பரப்பின் அடிப்படையில் எழுந்த ஒற்றைச் சொல்லாடல் அல்ல. அது ஆரியம் என்கிற ஆபத்தான, பார்ப்பனியம் என்கிற தீங்கான கோட்பாட்டுக்கு எதிராக வெடித்தெழுந்த ஒரு கோட்பாடு அது.
அது புதிதாக உருவானதல்ல. அது இயல்பாக இங்கு கிடக்கிற ஒன்று.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்தியா முழு வதும் நாகர் நாடாக இருந்தது; நாகர் நாடு என்பதுதான் திராவிட நாடு என்பதை ஒப்புக்கொள்கிறார், அவர் ஒரு வரலாற்று ஆய்வாளர்- புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். அவர் ஒரு சமூக ஆய்வாளர். அவர் மானுடவியலின் வல்லுநர்.
திராவிடர்கள் என்றால், பார்ப்பனர்கள் அல்லாதவர்கள்; ஆரியர்கள் அல்லாதவர்கள்
அவர் ஒப்புக்கொள்கிறார், இந்திய தேசம் முழுவதும் பரவியிருந்த மக்கள் நாகர்கள். நாகர்கள் வேறு யாரும் இல்லை, திராவிடர்கள். திராவிடர்கள் என்றால் வேறு யாரும் இல்லை, பார்ப்பனர்கள் அல்லாதவர்கள்; ஆரி யர்கள் அல்லாதவர்கள்.
ஆக, இந்தியா முழுவதும், சொந்த தாய் மண்ணாக, தேசமாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்.
மொழிக் கலப்பால், இனக் கலப்பால், ஆரியக் கலப் பால், சமஸ்கிருதக் கலப்பால், பண்பாட்டுக் கலப்பால், திராவிடர் இனக் கலப்பு ஏற்பட்டு மாறிப் போனார்கள். தென்னிந்தியாவாக சுருங்கி, தமிழ்நாடாக இன்றைக்குச் சுருங்கிக் கிடக்கிறது.
எனவே, ஒன்றை நாம் மிக அழுத்தமாகப் பதிய வைக்கவேண்டி இருக்கிறது; சுட்டிக்காட்டவேண்டி இருக்கிறது. திராவிடம் என்பது கருத்தியல் அடையாளம்; நிலவியல் அடையாளம் என்பதல்ல.
திராவிட மொழிகள் பேசப்பட்டதால், இது திராவிட நிலப்பரப்பு என்கிற ஒரு கோரிக்கை எழுந்தது சரிதான். ஆனால், அந்தத் திராவிட நாடு கோரிக்கை கைவிடப் பட்டதால், திராவிட கருத்தியலும் நீர்த்துப் போனது என்று பொருளில்லை. மொழி வழிமாநிலங்கள் ஏற்பட்ட தால், திராவிட மொழி என்ற ஒன்று இல்லை என்ற அடிப்படையில் வாதிட்டு, திராவிட கருத்தியலையே மறுப்பது அல்லது எதிர்ப்பது பார்ப்பனர்களுக்கு ஆதர வான நிலைப்பாட்டை எடுப்பதாகும். ஆரியத்திற்குத் துணை போவதாகும்.
பெரியாரை எதிர்ப்பது என்பது,
ஆரிய ஆதரவு என்று பொருள்
ஆக, திராவிட எதிர்ப்பு என்பது பார்ப்பன ஆதரவு என்று பொருள். பெரியாரை எதிர்ப்பு என்பது, ஆரிய ஆதரவு என்று பொருள்.
நான் ஒரு கூட்டத்திலே கேள்வி எழுப்பினேன். வர லாற்றின் அடிப்படையில் பார்த்தால், அய்யா பெரியா ருக்கு முன்னதாக, இந்த மண்ணில் திராவிடம் என்கிற சொல்லாடல் கையாளப்பட்டு இருக்கிறது.
அயோத்திதாச பண்டிதர்-
இரட்டைமலை சீனிவாசன்
அயோத்திதாச பண்டிதர் திராவிட மகாஜன சபை என்கிற அமைப்பை கட்டியிருக்கிறார்.
இரட்டைமலை சீனிவாசன் ஆதிதிராவிட மகாஜன சபை என்ற அமைப்பை கட்டியிருக்கிறார்.
அய்யா பெரியார், 1879 இல் பிறந்தவர். திராவிட மகாஜன சபை 1891 இல் கட்டப்பட்டது. ஆதிதிராவிட மகாஜன சபை 1891 இல் கட்டப்பட்டது.
அப்பொழுதுதான் அம்பேத்கர் பிறக்கிறார். அம் பேத்கர் பிறக்கிறபொழுதே இந்த மண்ணில் திராவிட மகாஜன சபை என்ற ஒரு அமைப்பு உருவானது என் றால், திராவிடம் என்பதை பண்டிதர் எந்தப் பொருளில் கையாளுகிறார் என்றால், எங்களுக்கு ஜாதியும் வேண்டாம்; இந்து அடையாளமும் வேண்டாம். நாங்கள் திராவிடியன்ஸ். எங்களுக்கு ஜாதியும் இல்லை; மதமும் இல்லை. நாங்கள் இந்துக்கள் இல்லை என்கிற பிரகடனத்திலிருந்துதான், அந்த அறிவிப்பிலிருந்துதான் திராவிடம் என்கிற சொல்லைக் கையாளுகிறார்.
உங்களுக்கு நெஞ்சிலே உரமிருந்தால், பண்டிதரை விமர்சனம் செய்யுங்கள்; பெரியாரை விமர்சிக்காதீர்கள். இதை நான் பொது அரங்கிலே கேட்கிறேன்.
உனக்கு நெஞ்சிலே உரமிருந்தால், நேர்மை திறமிருந் தால், பண்டிதர் சொன்னது தவறு என்று சொல். பண்டி தர்தான் திராவிடக் கருத்தியலுக்குக் காரணமாக இருந் தவர். பண்டிதர் அடையாளங்களை நொறுக்குவோம் என்று சொல். பண்டிதருடைய எழுத்துக்களைக் கொளுத்துவோம் என்று சொல்.
எனக்கு ஜாதி அடையாளம் வேண்டாம்; ஜாதி அடை யாளம் வேண்டாம் என்றால், இந்து அடையாளம் வேண்டாம்.
ஆக, திராவிட அரசியல் என்பதே, இந்து மதம் என்பது தேவையில்லை என்பது. ஜாதி தேவையில்லை என்பது.
ஜாதியை எதிர்ப்பது, இந்து மதத்தைத் தவிர்ப்பது அல்லது எதிர்ப்பது. இதுதான் அடிப்படையான அரசியல்.
ஆனால், இவர்கள் ஏன் பெரியாரைக் குறி வைக் கிறார்கள் என்றால், பெரியாரை யார் எதிர்ப்பது? ஆதி காலத்திலிருந்து, பெரியார் போராடத் தொடங்கியதி லிருந்து எதிர்ப்பவர்கள் யார்? அவர் களுக்கு இவர்கள் துணை போகிறார்கள், கைக்கூலிகளாக இருக்கிறார்கள் என்றுதானே பொருள்.
பெரியாரைக் குறி வைத்து இந்த மண்ணில் எதிர்க்கக் கூடிய சக்தி ஆரிய சக்திதான்!
பெரியாரைக் குறி வைத்து இந்த மண்ணில் எதிர்க்கக் கூடிய சக்தி ஒரே ஒரு சக்தி ஆரிய சக்திதான். பார்ப் பனர்கள்தான். பார்ப்பனிய அரசியல்வாதிகள்தான். குலதர்மத்தைப் பேசக்கூடியவர்கள்தான். வருணாசிர மத்தை நியாயப்படுத்தக் கூடியவர்கள்தான் - அவர்கள் பெரியாரை எதிர்க்கிறார்கள். நீங்களும் பெரியாரை எதிர்க்கிறீர்கள் என்றால், நீங்கள் யாருக்குத் துணை போகிறீர்கள்?
சிந்தித்துப் பாருங்கள்.
தமிழ்த் தேசியம் என்பது தெலுங்கு எதிர்ப்பிலிருந்து எப்படி வரும்?
தமிழ்த் தேசியம் என்பது கன்னட எதிர்ப்பிலிருந்து எப்படி வரும்?
இது வெறும் மொழி வாதம் - இன வாதம்.
தமிழ்த் தேசியம் என்பது இந்துத்துவ எதிர்ப்பி லிருந்துதான் வர முடியும்.
தமிழ்த் தேசியம் என்பது சனாதன எதிர்ப்பி லிருந்துதான் வர முடியும்.
ஒரு நதி தொடங்குகிற இடத்தில் அதற்கு ஒரு பெயர் இருக்கும்; நடுவில் ஒரு பெயர் இருக்கும். கடைசியில் ஒரு பெயர் இருக்கும்.
தொடங்கும்போது திராவிடம் - இன்றைக்கு வளருகிறபொழுது தமிழ்த் தேசியம்!
அந்த மாதிரிதான் தொடங்கும்போது திராவிடம் - இன்றைக்கு வளருகிறபொழுது தமிழ்த் தேசியம். இரண்டும் ஒரே நதியின் பெயர்தான். இரண்டும் ஒரே நதிதான்.
திராவிடத்திலிருந்து, திராவிடக் கொள்கையிலிருந்து பரிணாமம் பெற்றதுதான் மொழிவழி தேசியம்.
அந்த மொழி வழி தேசியம் பரிணாமம் அடைவதற்கு இத்தனை 10 ஆண்டுகள் காத்திருக்கவேண்டி இருந்தது.
தமிழைக் காப்பதற்குத்தானே போராடினார்கள் பெரியாரும் - அண்ணாவும்!
திராவிடத்தை முன்மொழிந்த பெரியாரும், திரா விடத்தை உயர்த்திப் பிடித்த அண்ணாவும் தமிழைக் காப்பதற்குத்தானே போராடினார்கள்.
சமஸ்கிருத மொழிகளை, அந்தச் சொற்களை அழித்தொழிக்கத்தானே போராடினார்கள்; இந்தியை அழித்தொழிக்கத்தானே போராடினார்கள். பார்ப்பனி யத்தை எதிர்த்துத்தானே இந்தப் பணிகளில் ஈடு பட்டார்கள்.
எவ்வளவு சமஸ்கிருத சொற்கள் மாறி, இன்றைக்குத் தமிழ்ச் சொற்களாகி இருக்கின்றன.
ஆக தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுப்பதில் பெரியார் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற அரசியல் இயக்கம் எந்த அளவிற்குப் பங்களிப்பு செய்திருக்கின்றது என்பதை உணராமல், வரலாற்றைத் திணிக்கப் பார்க்கிறார்கள். அல்லது ஆரிய, பார்ப்பனிய அரசியலுக்குத் துணை போகிறார்கள்.
எனவே, பெரியார் எதிர்ப்பு என்பதை வெறும் திராவிடர் கழகத்திற்கு எதிரான நடைமுறை என்று பார்த்துவிடக் கூடாது; ஒதுங்கி இருந்துவிடக் கூடாது. தி.முக.. எதிர்ப்பு என்று வெறும் அது ஒரு கட்சிக்கு எதிரான எதிர்ப்பு என்று நாம் விலகி நிற்க முடியாது.
திராவிடம் என்கிற அரசியல், திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்குமான - அந்த அளவிலே நின்றுவிடக் கூடிய ஒரு கருத்தியல் அல்ல.
அது பார்ப்பனியத்தை எதிர்க்கிற அனைவருக்குமான கருத்தியல்.
அம்பேத்கரும் ஒரு திராவிடர்தான்!
நான் ஒரு கூட்டத்திலே சொன்னேன், இந்தப் பார்வையில், அம்பேத்கரும் ஒரு திராவிடர்தான் என்று சொன்னேன்.
இந்தக் கருத்தியல் நோக்கில், புரட்சியாளர் அம்பேத் கரும் ஒரு திராவிடர்தான். அவரை நீங்கள் மராத்தியர் என்று பார்க்கலாம். அவர் ஆரிய எதிர்ப்பாளர்,
No comments:
Post a Comment