சென்னை தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் பொது இடத்தில் அப்பகுதி பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 9-9-1970 அன்று இரவோடு இரவாக ஒரு பிள்ளையாரைக் கொண்டு வந்து நட்டு வைத்து. (சங்கராச்சாரியும்) சுயம்பு வாக’ தோன்றியது என்று கதை விட்டார்கள்.
பார்ப்பன ஏடுகள் கதை கட்டி அதை பெரும் பரபரப்பான செய்தியாக்கி நகரத்திலேயே ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகச் சித்தரித்து அதிசயம் அதிசயம் என்று அலறி புராணப் புளுகு மூட்டைகளை யெல்லாம் அதற்கு ஆதாரம் காட்டி விட்டனர். இந்தச் சூழ்சியை நமது ‘விடுதலை’ தொடர்ந்து அம்பலப்படுத்தி பொதுமக்களுக்கு இதுபற்றிய உண்மைகளை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து சென்னை நகரப் போலீசார் ‘ தீவிரமாக விசாரித்து, அந்த பிள்ளையார் சிலை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் உதவியாலும், பார்ப்பனர் ஆதரவிலும், தலைமை போலீஸ்காரர் செல்வராஜ் என்பவர் ரூ. 71- விலைக்கு வாங்கி வந்து வைத்தது என்று கண்டு பிடிக்கப்பட்டு 10-10-1970 அன்று அப்புறப்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment