இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? - க.சிந்தனைச்செல்வன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? - க.சிந்தனைச்செல்வன்

அரியலூரில் மாநில இளைஞரணி மாநாடு தமிழர் தலைவரின் அதிரடியானஅறிவிப்பு... பெருநகரங்களில் நடைபெறக்கூடிய மாநில மாநாட்டை அரியலூரில் ஏன் அறிவித்தார். பலருக்கும் குழப்பம். சிலருக்கு மயக்கம்.வரலாறு அறிந்தவர்கள் தெளிவாகப் புரிந்து கொண் டனர். திராவிட இயக்கம்-தன்மான இயக்கத்தின் தளபதிகள்  தந்தை பெரியார் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதில் முதன்மையானது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் என்றால் அதற்கு சற்றும் சளைக்காமல் களமாடியது ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம். தந்தைபெரியாரின் தலைமைப் பீடமாக திருச்சி திகழ்ந்தது. அதன் ஒரு பகுதிதான் இன்றைய அரியலூர் மாவட்டம்.

உடையார்பாளையம் வேலாயுதம், அணைக்கரை டேப்தங்கராசு, கீழமாளிகை தமிழ்மறவர் பொன்னம் பலனார், உள்ளிட்ட திராவிட இயக்கத் தீரர்களைப் பெற்றது அரியலூர் மாவட்டம். அரியலூர் சிங்காரம், ஆண்டிமடம் எஸ்.சிவசுப்ரமணியன், செயங்கொண் டம் க.சொ.கணேசன், உல்லியக்குடி ரெங்கசாமி போன்ற சுயமரியாதை சுடரொளிகளைக் கண்டதுஅரியலூர் மாவட்டம். மேம்போக்காகப் பார்த்தால் ஜாதிக்கட்சி களின் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் போல் சிலருக்குத் தோன்றினாலும், ஜாதியை ஒழிக்க அறுபது ஆண்டு களுக்கு முன்பேஅரசியல் சட்டத்தை கொளுத்தி 9 மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை சென்ற ஜெயங் கொண்டம் கே.பி.கலியமூர்த்தி, செந்துறை கருத்த மணி என்ற அரியலூர்.வாலஜா நகரத்தில் எத்தனை எத் தனை பேர்..வாழும் சாட்சியாய் தத்தனூர் துரைக் கண்ணு. கண்ணுக்குத் தெரியாத கருப்புச்சட்டைகள் ஏராளம் ஏராளம். கொள்கை பயிரின் விளைச்சல் தாராளம். தமிழர் தலைவர் ஆசிரியரின் காலத்திலும் அது தொடர்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச் சர்கள் ஆசிரியரின் மாணவர்களாய் இருக்கின்றனர். அதனால்தான் அரியலூர் மாவட்டம்இந்துத்துவ சக்தி களின் கண்களை உறுத்துகிறது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் ஆங்காங்கே போடும் ஆட் டங்களை அடக்குவதற்கு ஜாதியை சனாதானத்தை வேரறுக்கஆசிரியர் போட்ட திட்டம்தான் - இட்டக் கட்டளைதான் அரியலூர் மாநாடு.

மயங்கியவர்களும்  தயங்கியவர்களும் தலைவரின் உறுதியை அறிவர். களப்பணிகள் துவங்கியது. இளை ஞரணி கலந்துரையாடல், மாவட்ட கலந்துரையாடல், ஒன்றிய வாரியாகக் கலந்துரையாடல்கள், அரியலூர், செந்துறை, ஆண்டிமடம் எனத் தொடரும் ஓவியர் புகழேந்தியின் சுவரெழுத்துப்பிரச்சாரம் துண்டறிக் கைகள், நன்கொடை ரசீதுகள் எனக் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. கலந்துரையால் கூட்டங்களில் தோழர்கள் போட்டிபோட்டுக்கொண்டு நன்கொடை அறிவித்தார்கள்..அந்தத் தோழரின் அறிவிப்பு அனைவரையும் திக்குமுக்காட வைத்தது.

ஆம் செந்துறை மா.சங்கர் என்ற அந்த எளியத் தோழர் - கட்டட கலைஞர்

 மாநில மாநாட்டிற்காக தனது குடும்பத்தின் சார்பாக ஒரு லட்ச ரூபாயை அளிப்பதாக அறிவித்தார். தினந் தோறும் செந்துறை பகுதியில் விடுதலையை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்க்கும் தொண்டறப்பணியைத் தொடர்ந்து செய்திடும் தோழர். வானம் பார்க்கும் மாளிகையில் வசிப்பவரல்ல. கூரை வீடுதான். ஆனால் இயக்கத்தை நேசிப்பதில் சிகரத்தைத் தொட்டவர். திருச்சியில் நடைபெற்ற மகளிரணி கலந்துரையாடலில் அந்த ஒரு லட்ச ரூபாயை தன் தலைவரிடம் அளித்து மகிழ்ந்தது அந்தக்குடும்பம்.தன்னுடைய நலனை விட இயக்கத்தின் நலனை-சமுதாயத்தின் நலனை பெரி தாக எண்ணும் கருஞ்சட்டை வீரர்கள் இருக்கும்வரை இந்த தத்துவம் வென்றே தீரும். ஆரிய எதிர்ப்புப் போரில் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

No comments:

Post a Comment