திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்- பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்புகளின் மாவட்ட கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்- பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்புகளின் மாவட்ட கலந்துரையாடல்

அவிநாசி, ஜூன் 3 திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்புகளின் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 29.5.2022 ஞாயிறு காலை 10 மணிக்கு அவிநாசி கோவம்ச திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

ஒன்றிய தலைவர் ராமசாமி வரவேற்றார்.  மாவட்ட தலைவர் வெ.குமாரராஜா தலைமை யேற்று நடத்தினார். முன்னதாக வருகை புரிந்தோர் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண் டார்கள். தொடர்ந்து குமாரராஜா தலைமை உரை யில்,  கூட்டத்தின் நோக்கம், அமைப்பு செயல்படும் விதம், தலைமையின் எதிர்பார்ப்பு, மாநாட்டின் சிறப்பு  இவற்றைப் பற்றி கூறினார்.

தருமன்.வீரமணி

மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலை வர்  தருமன்.வீரமணி முன்னிலை வகித்து ஆற்றிய உரையில், இந்தக் கூட்டம் எப்படிப்பட்ட நேரத்தில் கூட்டப்படுகிறது என்பதையும், செஞ்சியில் நடை பெறும் மாநாடு தொடர்பான மாவட்ட பொறுப்பா ளர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண் டும் என்பதையும், தலைமையின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் சுருக்கமாக உரையாற்றினார். 

அவிநாசி பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவிந்தராஜ், ஆட்டையாம்பட்டி சிறீபெருமாள், நீலமலை மாவட்ட செயலாளர் மு.நாகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் குன்னூர் இராவணன், மேட்டுப்பாளையம் நடூர் ஜீவபாரதி, திருப்பூர் 

பூ. குரு விஜயகாந்த் ,அவிநாசி ஆ. பொன்னுசாமி, நம்பியாம்பாளையம் பாபுசாந்தி, அவிநாசி ஆர். நவநீதகண்ணன், அவிநாசி ஏ. ஆர். ரமேஷ் , நாகமங்கலம் சு.செல்வகுமார், அவிநாசி ஏ.ரவிச் சந்திரன், தமுஎச. சம்பத்குமார்,   திருப்பூர் சு. துரை முருகன் ஆகியோர் உரையாற்றினர்.

மாரி.கருணாநிதி

கலைத்துறை மாநில செயலாளர் மாரி. கருணா நிதி,  பகுத்தறிவாளர் கழகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பேசினார். கலைகளில் ஆர்வம் உடையவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதை வலியுறுத்தி உரையாற்றினார். பகுத்தறிவு ஆசிரியரணி மாநிலத் தலைவர் தமிழ் பிரபாகரன் மாநாட்டின் நோக்கம்,  செயல்பாடு, ஏன் இந்த மாநாடு என்பது பற்றி பேசினார். பகுத்தறி வாளர் கழகப் பொதுச் செயலாளர்  வி.மோகன் இந்த மாநாடு ஏன் செஞ்சியில் நடைபெறுகிறது என்பதையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் நோக்கம் என்ன என்பதையும்,   மாநாடு  சிறப்பு பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், பெரியாரால் வளமாகவும் நலமாக வும் வாழும் நாம் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மாநாட்டிற்கு எல்லோரும் வரவேண்டும் அதுவும்  குடும்பத் தோடு என்றும், தொடர்ந்து நிதியையும் வாரி வழங்கிட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார்.

மருத்துவர் கவுதமன்

மருத்துவர் குன்னூர் கவுதமன் உரையில், இந்த இயக்கம், ஆசிரியர், அய்யா, அம்மா அவர்களு டைய பணி பற்றி மிகவும் நெகிழ்ச்சியான சம்பவங் களைக் கூறி இந்த மாநாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துச் சொன்னார். 

இரா.தமிழ்ச்செல்வன்

இறுதியாக மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா தமிழ்ச்செல்வன் அவர்கள் பகுத் தறிவாளர் கழகத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை,  மாநாடு,  எதிர்காலத்தின் நிலை,  மாநாடு வெற்றிபெற உங்களுடைய பங்கு, உழைப்பு, பொருள் ஆகியவற்றை வாரி வழங்குங்கள் என்று அன்பான வேண்டுகோளை விடுத்து முடித்தார். தொடர்ந்து குரு விஜயகாந்த்  நன்றி கூறினார்.  கூட்டத்தில் அனைவரும் ஒத்துழைப்பதாகவும் இயன்றவரை பொருளுதவி செய்வதாகவும் கூறி னார்கள். 

மாநில துணைத்தலைவர் தருமன்.வீரமணி ரூ.10,000 வழங்கிடுவதாக ஒப்புதல் வழங்கிட கூட்டம் இனிதே முடிவுற்றது.

No comments:

Post a Comment