தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் கணக்கெடுப்பு காவல்துறைத் தலைவர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் கணக்கெடுப்பு காவல்துறைத் தலைவர் உத்தரவு

சென்னை, ஜூன் 1  ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய் யப்பட்டார். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக, வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் தொழி லதிபர், மனைவியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் களிடமிருந்து 1,000 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன. இது தொடர்பாக நேபாளத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொருவர் என 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, மேலும் சில குற்ற வழக்குகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிக்கினர்.

இவர்களில் சிலர் குற்றங்களை செய்துவிட்டு, தங்களது சொந்த மாநிலம் சென்று பதுங்கிவிடு கின்றனர். இதனால், அவர்களது முகவரியைக் கண்டறிந்து, அங்கு சென்று கைது செய்வதில் காவல் துறையினருக்கு காலதாமதம் ஏற்பட்டது.

வடமாநிலத்தவரின் முகவரி இருந்தால், யாரேனும் குற்றச் செயல் களில் ஈடுபடும்போது அவர்களைக் கண்டறிவது எளிது என காவல்துறையினர் கருதுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரிக்க காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வெளிமாநில ஆட்களை வைத்து வீடு கட்டுவோர், பொறி யாளர்கள், கட்டட ஒப்பந்ததாரர்கள், உணவக உரிமையாளர்கள், விடுதி நிர்வாகிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும், அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையங்களில், தங்களிடம் பணிசெய்யும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment