தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திடுக ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் இயக்குநர் அறிவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திடுக ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் இயக்குநர் அறிவுரை

சென்னை, ஜூன் 4 தமிழ்நாட்டில் வரும் 13ஆம் தேதி பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் மாண வர்களின் சேர்க்கை மற்றும் கல்வி துறையின் செயல்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை டி.பி.அய். வளாகத்தில் நடை பெற்றது.  

 இந்த கூட்டத்துக்கு தொடக் கக்கல்வி இயக்குனர் அறிவொளி தலைமை தாங்கினார். இதில் 24 தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங் களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித்துறையின் செயல்பாடுகள் எந்த அளவில் இருக்க வேண்டும்? செயல்படுத்தப்பட வேண்டிய கூடு தல் நடவடிக்கைகள் என்ன? என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்துகள் கேட்டு பெறப்பட்டன.

 மேலும் மாணவர்களுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்தும் பேசப்பட்டதாக கூறப் படுகிறது. மாணவர் சேர்க்கை குறித்து பேசுகையில், சிலபுள்ளி விவ ரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

அதில் 669 தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாண வர்கள் எண்ணிக்கை இருப்ப தாகவும், அதில் 11 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவரும், 24 பள்ளிகளில் 

2 மாணவர்களும், 41 பள்ளிகளில் 

3 மாணவர்களும், 50 பள்ளி

களில் 4 மாணவர்களும், 77 பள்ளிகளில் 5 மாணவர்களும், 114 பள்ளிகளில் 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் 8 மாணவர்களும், 153 பள்ளிகளில் 9 மாணவர்

களும் இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. 

எனவே இதை வரும் கல்வி யாண்டில் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி விவாதிக்கப் பட்டது.

No comments:

Post a Comment