கல்வி சான்றிதழ்கள் வியாபார பொருள் இல்லை மருத்துவக் கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

கல்வி சான்றிதழ்கள் வியாபார பொருள் இல்லை மருத்துவக் கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 1  கல்விச் சான்றிதழ்கள் வியாபா ரப் பொருளல்ல என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் மருத் துவ மேற்படிப்பு மாண வர்களிடம் பெற்ற சான் றிதழ்களை திரும்ப வழங் கும்படி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு உத்தர விட்டுள்ளது. 

சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, மதுரை, தூத் துக்குடி, தேனி மருத்துவ கல்லூரிகளில், கடந்த 2018-2021ஆம் கல்வி யாண்டுகளில் மேற்படிப்பு முடித்த கிரிதரன் உள் ளிட்ட 25 மருத்துவர்கள் மேற்படிப்பில் சேரும் போது எழுதிக் கொடுத்த உத்தரவாதத்தின்படி 2021 மே மாதம் முதல் 10 மாதங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினர்.

 அதன் பின் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், தங்கள் உண் மைச் சான்றிதழ்களை வழங்கும்படி சம்பந்தப் பட்ட கல்லூரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், உத்தரவாத பத் திரத்தில் குறிப்பிட்டபடி 2 ஆண்டுகளை முழுமை யாக முடிக்காத காரணத் தால் சான்றிதழ்களை தர முடியாது என்று கல்லூரி கள் மறுத்துள்ளன. இதை யடுத்து, தங்கள் சான்றிதழ் களை வழங்க உத்தரவிடக் கோரி 25 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன்பு விசார ணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர் மனோகரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதி பதி சுவாமிநாதன், மனு தாரர்களுடன் படித்த சக மாணவர்கள் சான்றிதழ் கோரி தாக்கல் செய்த வழக்கின் உத்தரவின்படி சான்றிதழ்களை திரும்ப வழங்கும்படி மருத்துவக் கல்லூரிகளின் டீன்க ளுக்கு மருத்துவக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மனு தாரர்களின் சான்றிதழ் களை 15 நாட்களில் திரும்ப வழங்க வேண்டும். கல்விச் சான்றிதழ்கள் வியாபாரப் பொருளல்ல. இந்திய ஒப்பந்தச் சட் டப்படி, சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் தங் கள் வசம் வைத்துக் கொள்ள முடியாது என்று உத்தர விட்டார்.

No comments:

Post a Comment