நெல்லை, ஜூன் 10- திருநெல் வேலி மாவட்டம் பகுத்த றிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 28.5.2022 அன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை, நெல்லை மாவட்டம் பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் இரா. வேல்முருகன் இல்லத்தில் நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட் டத் தலைவர் இரா.வேல் முருகன் தலைமை தாங் கினார். மாவட்ட அமைப் பாளர் திருமாவளவன் வரவேற் புரையாற்றினார்.
சேரன் மகாதேவி ப.க. பொறுப்பாளர் சேகர், தருவை சந்திரசேகரன், தென்கலம் வா.அய்யப் பன், கு.வெள்ளத்துரை, ச.சங்கரராஜ், முரசொலி முருகன், பட்டு, ஜார்ஜ், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, குற்றா லத்தில் நடைபெற உள்ள பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு, இயக்க இதழ்கள் சந்தா சேகரிப்பு உள் ளிட்ட நிகழ்வுகளில் தங் களின் பங்களிப்பு குறித்து கருத்துரை வழங்கினர்.
திராவிடர் கழக மாவட்ட தலைவர் இரா.காசி, மாவட்டச் செய லாளர் ச.இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாடு நிதியாக மாவட்டச் செய லாளர் ச.இராசேந்திரன் ரூ.2000, மாவட்டத் தலை வர் இரா.காசி ரூ.500, ப.க. மாவட்டத் தலைவர் இரா.வேல்முருகனிடம் வழங்கினர்.
இறுதியில் தருவை செ.சந்திரசேகரன் நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
19.6.2022 அன்று செஞ் சியில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா நிறைவு மாநாட்டிற்கு தனி வாக னத்தில் சென்று பெரு மளவில் கலந்து கொள் வது எனவும்,
மாநில மாநாட்டு நிதியாக, மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட நிதியை வசூலித்து அளிப்பது எனவும், இயக்க இதழ்க ளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, ஜிலீமீ விஷீபீமீக்ஷீஸீ ஸிணீtவீஷீஸீணீறீவீst இதழ் களுக்கு சந்தா சேகரிப்பது எனவும், இனிவரும் காலங் க ளில், மாவட்ட பகுத்தறி வாளர் கழக மாதாந்திர கூட்டத்தை, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று தொடர்ந்து நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment