பாது மக்களுக்காக, பொதுத் தொண்டு செய்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல், பொதுமக்கள் பாராட்டுதலுக்குரிய எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அவர்களைப் பாராட்ட, பெருமைப்படுத்த யோக்கியமான பொதுமக்கள் முயற்சிப்பது இயற்கையே யாகும். அதிலும் கலைஞர் அவர்கள் விஷ யத்தில் பாராட்டத்தகுந்த பல தன்மைகள் இருக்கின்றன.
கலைஞர் அவர்கள் தனது பள்ளி மாணவப் பருவத்திலிருந்து இன்றைக்கு சுமார் 45 வயது வரை 25-30 ஆண்டுகளாக பொதுத் தொண்டு செய்து வருகிறார். தியாகிகள் அடையாளமாக சிறை செல்லும் தன்மையில் பலமுறை சிறை சென்றிருக் கிறார். இவ்வளவு மாத்திரமல்லாமல் ஒரு கட்சியையே ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஒருவராய் இருந்து, அந்தக்கட்சியை நாடாளும் ஸ்தாபன மாக்கி, இன்று மகாவன்மை பொருந்திய காங்கிரசை எதிர்த்து தோல்வியடையச் செய்து வெற்றிக்கொடி கண்ட ஒரு முக்கி யஸ்தருக்கு ஒரு சிலை, பயனடைந்த பொது மக்கள் அல்லது அக்கட்சியார், அவ்வரசி யலில் பற்றுள்ளவர்கள் சிலை வைக்க முன்வந்தால் அது விவாதத்துக்குரியதா? சிலை வைப்பது அவசியமல்லவா?
இனி தமிழ் நாட்டில் நூற்றுக்கணக்கான சிலைகள் தோன்றலாம், அதுவும் பார்ப் பனர் நெஞ்சம் வெடித்துவிடும் அளவுக்குத் தோன்றலாம். இந்த நிலையில் பார்ப்பன பொறாமைக்குப் பயந்து ‘எனக்குச் சிலை வேண்டாம்‘ என்று சொன்னால், அது பார்ப்பனருடன் சேர்ந்து கொண்டு அல்லது பார்ப்பனருக்குப் பயந்து தமிழர் பெருமை யைக் குலைக்க பங்கு கொள்ளுவதேயாகும்.
எனவே கலைஞருக்குச் சிலை வேண் டியதில்லை என்றிருந்தால் எனக்கு வேண் டாம், நான் விரும்பவில்லை என்றுசொல்லி விட்டுப் பேசாமல் இருக்கலாமே ஒழிய அதைத் தடுப்பது அறிவுடைமையாகாது; ஏனென்றால் அந்த சிலை அவரது சொந்த விஷயமல்ல, அது தமிழனைப் பாராட்டு வதும், தமிழ் மக்களிடையில் பின் சந்ததிக்கு நினைவூட்டும் அறிகுறியாகும்.
கலைஞர் அறிவில் சிறந்தவர், நிர்வாகத் தில் சிறந்தவர், பொதுத் தொண்டுக்கு தியா கம் செய்ததில் சிறந்தவர், பார்ப்பன ஆதிக் கத்திலிருந்த ஆட்சியை தமிழர்க்கு ஆக் கித் தந்தவர்.’’ இவ்வாறு தமிழர் இனப் பாது காவலர் தந்தை பெரியார் ஆணையிட்டார்.
- (‘விடுதலை’, 28.5.1968, 29.5.1968)
No comments:
Post a Comment