பிராமணர்கள் பிராமண மகாசபை வைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பெருமையும் உரிமையும் கிடைக்கிறது. நம்மைச் சூத்திரர் என்று கூறிக்கொண்டால் உயர் ஜாதியானுக்கு அடிமையாயிருக்கும் உரிமைதான் கிடைக்கும். பார்ப்பனனின் தாசி மக்கள் என்ற பட்டம்தான் கிடைக்கும். அந்தச் சூத்திரத் தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய வேலையாகக் கொண்டிருப்பதால்தான் அப்பெயரால் எவ்விதச் சலுகையோ, உரிமையோ, கிடைக்காததால்தான் அப்பெயருக்குள்ள இழிவு காரணமாகத்தான் அத்தலைப்பில் இதே இழி தன்மையுள்ள திராவிடர்களாகிய முஸ்லிம்கள், கிருத்துவர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், கவுண்டர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் இவர்களெல்லாம் ஒன்று சேர மறுத்து விடுவார்கள். ஆதலால்தான் நாம் நம்மைச் சூத்திரர் என்று கூறிக் கொள்ளாமல் திராவிடர்கள் என்று கூறிக்கொள்கிறோம்.
- தந்தை பெரியார்
No comments:
Post a Comment