புதுடில்லி,ஜூன் 9 -தமிழ்நாட்டில் மக்கள் நலப்பணியாளர்கள் விவ காரத்தில் தமிழ்நாடு அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மக்கள் நல பணியாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடைகோரிய மனுவை உச்சநீதி மன்றம் விசாரித்தது.
அரசின் புதிய முடிவுக்கு தடை விதிக்க முதலில் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. குறிப்பாக, இந்த தடைகோரி விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர் மறுவாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் சார்பில் தாக்கல் செய் யப்பட்ட மனுவில் தமிழ்நாட்டில் சுமார் 13,500 மக்கள் நல பணி யாளர்களில் 1,800 பேர் இறந்துவிட்டனர். அதில் 7,000 பேர் 53 வயதை கடந்துவிட்டனர்.
1,500 பேர் 47 வயதை கடந்துவிட்டனர். மேலும் மக்கள் நல பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ள ஊதிய அட்டவணை, ஏற்கெனவே மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப் பட்ட சிறப்பு ஊதிய அட்ட வணையை விட மிக குறைவு. ஒன்றிய மாநில அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் நல பணியாளர்களுக்கு பின் ஊதியம் அல்லது வழங்கப்பட வேண்டிய ஊதியம் தற்போது மாநில அரசு ஏதும் தெரிவிக்க வில்லை. எனவே மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாத ஊதியம் ரூ.7,500 உடன் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணி அமர்த்தும் தமிழ்நாடு அரசின் முன்மொழிவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அனிருதா போத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிப்பிரியா பத்மநாபன், இந்த மனுவை தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது பேசிய நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் முன்மொழிவு கட்டாயப்படுத்த வில்லை, இந்த முன்மொழிவை ஏற்று பணியில் சேருபவர்கள் சேரலாம். எனவே இந்த மனு மீது தடை விதிக்கமுடியாது; இதில் எவ்வித அரசியலும் இல்லை என கூறினர். தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், நீண்ட காலம் பணியில் இல்லாத மக்கள் நல பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு பணி வழங்க முன்மொழிவை அறிவித்துள்ளது.
எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டாம் என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பெற்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் முன்மொழிவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், அரசின் முன்மொழி வை மறுத்து பணியை ஏற்காத வர்களின் உரிமைகள் எவ்விதத் திலும் பாதிக்கப்படாது என்று கூறி மனுவை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment