முக்கிய சாலைகள் சுத்தம்: ஆணையர் புதிய உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

முக்கிய சாலைகள் சுத்தம்: ஆணையர் புதிய உத்தரவு

சென்னை, ஜூன் 2- பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. பேருந்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. உட்புறச் சாலைகளும் பராமரிக்கப் பட்டு வருகிறது. இதில் பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகளை தூய் மைப்படுத்தும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த சாலையோரங்கள் மற்றும் மய்யத்தடுப்பு ஓரங் களில் மெல்லிய மணல் மற் றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வும், நாளடைவில் சாலை களில் உள்ள மழைநீர் வடி கால்களில் சென்று அடைப் பையும் ஏற்படுத்துகின்றன. பெருநகர சென்னை மாநக ராட்சியின் சார்பில் நவீன எந்திரமான 'மெக்கானிக்கல் ஸ்வீப்பர்' வாகனங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு இந்த மணல் மற்றும் தூசிகள் சுத்தம் செய் யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்ட லங்களில் சாலைகளை சுத்தம் செய்ய 56 'மெக்கானிக்கல் ஸ்வீப்பர்' வாகனங்கள் பயன் படுத்தப்பட்டு வருகிறது. 

அதில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய 4 மண்ட லங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய 7 'மெக்கானிக்கல் ஸ்வீப்பர்' வாகனங்களும், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம் பத்தூர், அண்ணாநகர் மண் டலங்களில் உள்ள சாலை களை சுத்தம் செய்ய '16 மெக் கானிக்கல் ஸ்வீப்பர்' வாகனங் களும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக் கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய 33 'மெக்கானிக்கல் ஸ்வீப்பர்' வாகனங்களும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. 

சாலைகளில் போக்குவ ரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களை முழு திறன் அளவிற்கு பயன்படுத் தும் வகையில் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு வாகனமும் 50 கி.மீட்டர் நீள சாலைகளை சுத்தம் செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட தகவல் அனைத் தும் பெருநகர சென்னை மாந கராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment