ஆறு குழந்தைகளையும் பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்ற அவலம்
மும்பை, ஜூன் 1- பெண் என் றாலே அடிமை என்று கூறுவது தான் ஹிந்து ‘தர்மம்’ மனு தர்மம். அதனை பின்பற்றுவோர், பரப்புவோர் ஆட்சி நடத்து வோர் உள்ள நாட்டில் பெண் களுக்கு உரிமை என்பது முயற்கொம்பாகிவிடும்.
மனித இனத்தின் சரிபாதி பெண்ணினம். மனுதர்மத்தை போற்றுகின்ற சங் பரிவாரங்கள், ஆர்.எஸ்.எஸ். வழியில் ஆட்சி நடத்தும் பாஜகவினரால் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சம உரிமை அளிக்கின்ற அரசமைப்புச் சட் டத்துக்கு மாற்றாக மனு தர் மத்தையே கொண்டு வருவோம் என்று கூறிவரும் ஆர்எஸ்.எஸ். வழியில் பாஜக ஆளும் மாநி லங்களில் பெண்களின் வாழ்வு ரிமை முற்றிலும் பறிக்கப்பட்டு வருகிறது. ஹிந்து மதம் வேத மதத்தின் பெயரால் புராணக் கதைகள், நல்ல தங்காள் கதை களையும், மனுதர்மத்தையும் கூறிக்கொண்டிருந்தால், நாட் டில் பெண் குழந்தைகளை பெற்ற தாயே கொல்கின்ற அவ லமான நிலைதான் ஏற்படும் என்பதற்கு மராட்டிய மாநிலத் தின் நிகழ்வு சான்றாக உள்ளது.
மராட்டிய மாநிலம், ராய் காட் மாவட்டம், காரவலி கிராமத்தில் உள்ள 30 வயதான பெண் ஒருவர் அங்குள்ள கிணற் றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அக்குழந்தைகள் மூழ்கி விட்டனர். இதுகுறித்து பொது மக்களில் சிலர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்துக்கு சென்ற காவல் துறையினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் வீசப்பட்டு உயிரிழந்த குழந்தை களின் உடல்களை மீட்டனர். நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட அய்ந்து பெண் குழந்தைகளும் அடங்கும்.
அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் கூறிய தாவது, குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும்,இதனால் வெறுப்படைந்த அவர், பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணை யில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment