சிதம்பரம் நடராஜர் கோயில்: தீட்சிதர்களின் அடாவடித்தனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

சிதம்பரம் நடராஜர் கோயில்: தீட்சிதர்களின் அடாவடித்தனம்

கடலூர், ஜூன் 9- சிதம்பரம் நடராஜர் கோயிலில் அரசால் நியமிக்கப்பட்ட இந்து அறநிலைய துறை குழுவினர் 2ஆவது நாளாக நேற்று (8.6.2022) ஆய்வு செய்தனர். முதல் நாளில் (7.6.2022) குழுவினர் ஆய்வு நடத்த தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்கள் தமிழ்நாடு அரசுக்கு சென்றது. இதையடுத்து 5 பேர் குழுவை அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்து அறநிலைய துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த குழுவில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆலய நிலங்களுக்கான மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், அறநிலைய துறை இணை ஆணையர்கள் லட்சுமணன், நடராஜன், உதவி ஆணையர் அரவிந் தன், மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் குழுவும், அந்த குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக கடலூர் துணை ஆணையர் ஜோதியும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த குழு 7.6.2022 அன்று காலை கோயிலுக்கு வந்தது. அப்போது தீட்சிதர்கள் தரப் பில், கோயிலில் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கோயில் தீட்சிதர்களின் வழக்கு ரைஞர் சந்திரசேகர், அதிகாரிகள் குழுவிடம் ‘இது சட்டப்படியான குழு அல்ல, அதனால் ஒத்துழைக்க முடி யாது’ என்றார். பின்னர் குழுவினர் மதியம் 1 மணிக்கு பிறகும் கோயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது, கோயில் நடை அடைக்க வேண்டும் என்று தீட்சிதர்கள் கூறியதால், குழுவினர் வெளியே சென்று விட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு வந்தனர். அப்போதும் தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்க வில்லை. இதனால் அதிகாரிகளுக்கும், தீட்சிதர்களின் வழக்குரைஞருக்கு மிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் 7 மணி வரை அதிகாரிகள் கோயிலுக்கு வெளிப்புறம் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு விட்டு, தாங்கள் கொண்டு வந்திருந்த ஆவணங்களை படித்து பார்த்து விட்டு இரவு 7 மணிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் 2ஆவது நாளாக நேற்றும்  (8.6.2022) அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்த கோயிலுக்கு சென்றனர். அவர்களுடன் வருவாய் துறை அதி காரிகள் சென்றனர். பலத்த காவல்துறையினரின் பாதுகாப்போடு ஆய்வு நடைபெற்றது.


No comments:

Post a Comment