சென்னை, ஜூன் 4 விவசாயத் தேவைகளுக்கேற்ற வாகனங்களை வடிவமைப்பதில் தனக்குள்ள பொறுப்பை சோனாலிகா டிராக்டர்ஸ் நன்கு அறிந்து அதை சிறப்பாகச் செயல்படுத்துகிறது. மே மாதத்தில் மட்டும் 2 புதிய டிராக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் மத்தியப் பிரதேச விவசாயிகளுக்கென சோனாலிகா சிக்கந்தர் ஆர்.எக்ஸ். 50 மாடல் டிராக்டர், 12 எப் + 3 ஆர் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிறுவனத்தின் செயல்பாடு குறித்து இதன் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறியதாவது: “எங்களது ஒருங்கிணைந்த சிறப்பான முயற்சிகளின் பயனாக மே மாதத்தில் சோனாலிகா டிராக்டர்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது. அதிலும் குறிப்பாக 42.1 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டு 12,615 டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளது. மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் தேவை அறிந்து அவர்களுக்கேற்ற டிராக்டர்களை வடிவமைத்துத் தருவதை சோனாலிகா நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தவிர வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார கொள்முதல் விலையை (எம்.எஸ்.பி.) அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரபி பருவ கொள்முதல் தொடங்கிவிட்டது, அடுத்த பருவமழை சீசனும் ஆரம்பமாகிவிட்டது. இதன் மூலம் வேளாண் செயல்பாடுகள் 2023 ஆம் நிதி ஆண்டில் செழித்தோங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment