திண்டுக்கல், ஜூன் 1 திண்டுக்கல் , பழனி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மே 28 அன்று திண்டுக்கல் கொடகனாறு இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா.கமல்குமார் தலைமை யேற்றார்.
திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி தலை வர் சக்தி. சரவணன், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜி.எச். பாண்டி முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன், மாநில இளைஞரணி அமைப் பாளர் ஆ.பிரபாகரன் ஊக்கவுரையாற்றினர்.
பழனி மாவட்ட தலைவர் பெ. இரணியன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வழக் குரைஞர் மு.ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மண்டல தலைவர் மு.நாகராஜன், திண்டுக்கல் மண்டல இளைஞரணிச் செயலாளர் குண. அறிவழகன், திராவிட தொழிலாளர் கழக பேரவைத் தலைவர் அ.மோகன், தி.தொ.க. பேரவை துணைத் தலைவர் தி.க.செல்வம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்ட தலைவர்
இரா.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு மாணவர்கள் செல்வதற்கும், அரியலூர் மாவட்டத்தில் ஜூலை 30ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில இளைஞரணி மாநாட்டிற்கு செல்வதற்கும் திண்டுக்கல் மாவட்ட திராவிட கழகம் சார்பில் தனி பேருந்து ஏற்பாடு செய்யப்படும் என்பன உள்ளிட்டு தீர்மானிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல், பழனி மாவட்டங்களிலிருந்து பெருமளவில் பங்கேற்பாளர்களை அனுப்பு வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் செபஸ்டீன் சின்னப்பா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment