தேஜ் நாராயணன் டண்டன் என்பவர் லக்னோ வைச் சேர்ந்தவர். அவர் இந்தி மொழியில் ''ஜெயகிருஷ்ணா ஜெய கன்யா குமரி என்ற ஒரு பயண நூலை எழுதினார்.
ஆந்திராவைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது வெங்க டேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நரசிம்மாச்சாரி - தன்னிடம் சொன்ன ஒரு தகவலை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவில் ஒரு புரபசர், 11 ரீடர்கள் உள்பட 12 ஆசிரியர்கள் இருந்தார்கள்.
புரபசருக்கு மாதச் சம்பளம்: ரூ. 1200, ரீடருக்கு மாதம் ரூ. 900. மாதம் ஒன்றுக்குச் சம்பளம் மட்டும் ரூ.11,100. ஒரு முறை பல்கலைக்கழகத்தில் சமஸ் கிருதம்
படிக்க ஒரு மாணவர்கூட இல்லையாம்.
12 ஆசிரியர்களும் வேலையின்றிச் சம்பளம் - பெற்று வந்தனர்.
துணைவேந்தரை அணுகி, 'நாங்கள் வேலை இல்லாமல் வெறுமனே பொழுது போக்கிக் கொண்டு இருக்கிறோமே-- என்ன செய்ய?' என்று குறைபட்டுக் கொண்டார்கள்.
துணை வேந்தர் அதற்குச் சொன்ன பதில் : "உங்களுக்கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதியன்றே கிடைத்து விடுகிறது அல்லவா? பிறகு என்ன குறை? வேண்டு மானால், பல்கலைக்கழகத்தில் உள்ள பெரிய சமஸ்கிருத நூலகத்திற்குச் சென்று ஏதாவது படித்துக்கொண்டு இருங்கள்'' என்று அறிவுரை வழங்கினாராம்!
எப்படி? செத்த மொழி பெயரால் எவ்வளவுப் பணம் விரயம்? பக்தர்கள் . முட்டாள் தனமாகக் கொடுக்கும். பணம் எப்படி எப்படியெல்லாம் பாழாகிறது?
No comments:
Post a Comment