அண்ணாகிராமம், ஜூன் 4 கடலூர் மாவ ட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன்-அய்யம்மாள் ஆகியோர் மகன் தமிழ்வாணன், விழுப்புரம் மணிமொழி ஆகி யோர் மணவிழா, விழுப்புரம் சோலை மகாலில் 3.6.2022 வெள்ளி காலை 8 மணியளவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடை பெற்றது.
மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர்கள் சுப்பராயன், தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட மகளிரணி தலைவர் முனியம்மாள், மாவட்ட செயலாளர் பரணிதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் பகவான்தாஸ், விழுப்புரம் நகர தலை வர் மு.ரா.இளங்கோவன், கழகத் தலைவர் பண்ருட்டி புலிக்கொடி, செயலாளர் குண சேகரன், தடுத்தாஆட்கொண்டூர் ரேணு, தடுப் பணை தட்சினா ஆகியோர் பாராட்டுரை வழங் கினர்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழன்பன் வரவேற்புரையாற்றினார் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
கொள்கைப் பரப்புரை நிகழ்வாக மணவிழா அமைந்தது.
No comments:
Post a Comment