சென்னை, ஜூன் 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழி லாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத் துறை செய லாளர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாட்டில் தொழில் நிறுவன அமைப் புகள் மற்றும் தொழிற் சங்கங்கள் மூன்று சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகள் மீதான தங்களின் ஆலோசனை களையும், ஆட்சேபனை களையும் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் அளித்துள்ளன.
இருப்பினும் பெரும் பாலான தொழிற்சங் கங்கள் இவ்வரைவு விதிகளை தமிழில் அளித் தால் தங்களுக்கும், தங்கள் தொழிற்சங்க உறுப்பினர் களுக்கும் வரைவு விதி களை தெளிவாக புரிந்து கொண்டு தங்களின் கருத்தை தெளிவாக வெளியிட இயலுமென தெரிவித்தனர்.
இதனையடுத்து, மேற்படி வரைவு விதிகளை தமிழாக்கம் செய்ய வல்லு நர்கள் சிலர் நியமிக்கப் பட்டு இத்தமிழாக்கப் பணி தற்போது போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி மூன்று சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகளும் தமிழாக்கம் செய்யப்பட்டு அவை மீண்டும் தொழிற் சங்கங்களுக்கும், தொழில் நிறுவன அமைப்புகளுக் கும் அனுப்பி வைக்கப் பட்டு அவற்றின் மீது அவர்களின் கருத்துக்கள் போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டு பெறப் படும். மேலும் அவர்களின் கருத்துக்களை நேரடியாக பெறுவதற்கு மீண்டும் விவாதக் கூட்டங்களும் நடத்தப்படும்.
தமிழ் வரைவு விதி களின் மீதான கருத்துக் களை எழுத்து மூலமாக வும், நேரடி விவாதம் மூல மாகவும் பெறப்பட்ட பின் னரே இவ்வரைவு விதிகள் இறுதி செய்யப்படுமென தெரிவிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் அமைப்புசாரா தொழிலா ளர் நல வாரியங்களில் 9,90,665 தொழிலாளர்கள் புதியதாக பதிவு செய்யப் பட்டு 4,06,268 பயனாளி களுக்கு ரூ.299.02 கோடி உதவித் தொகையாக வழங் கப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழி லாளர் நல வாரியங்களில் பல்வேறு நலத்திட்ட உத விகள் உயர்த்தி வழங்கப் பட்டு வருகின்றன. தமிழ் நாடு கட்டு மானத் தொழி லாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர் களுக்கு வீட்டு வசதித் திட்டம் புதிதாக அறி முகப்படுத்தப் பட்டுள் ளது.
இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment