கடவுள் ஆகட்டும் மதம் ஆகட்டும் பக்தி ஆகட்டும் மோட்சம் ஆகட்டும் வைத்துக் கொள் எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச்சொத்து உலகத்துக்கு பொது சொத்தல்ல ஒழுக் கம் நாணயம் பொது சொத்து நான் பக்தி இல்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன நான் போய் விட்டு போகிறேன் நான் கடவுளை நம்பவில்லை அதை கொழுக்கட்டை என்று சொல்லு கிறேன் நான் போய் விட்டு போகிறேன் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை பாருங்கள் அதனாலேயே எனக்கு பக்தி இல்லை என்பதனாலேயே உங்களுக்கு என்ன நஷ்டம்
ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் என்ன ஆகும் பாருங்கள் நாணயம் இல்லை என்றால் என்ன ஆகும் உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும் இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்கு செய்கிற கெடுதி இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்கு செய்கிற கெடுதிக்கு பேர் தானே.
ஒழுக்கம் இல்லை என்றால் எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டிருக்கிறான் நாணய மாக இல்லையெனில் யாரையும் ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கிறான் உண்மையாக இல்லை என்றால் என்னத்தயோ எவரையும் ஏமாற்றி பொய் பேசி தப்பிக்க இன்னொரு தவற்றை செய்து கொண் டிருக்கிறாள் என்று தானே பொருள்
ஆகவே ஒழுக்கம் நாணயம் உண்மை என்ற உயர்ந்த குணங்கள் எல்லாம் பொது சொத்து மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்திற்கு கேடு ஒரு மனிதன் இந்த காரியங்களில் குற்றவாளியாக இருந்தான்ஆனால் கண்டிப்பாக இன்னொரு மனித னுக்கு கேடு விளைந்திருக்கும் இது முக்கியமில்லை பக்தி கடவுள் நம்பிக்கை மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது இவைதாம் முக்கியம் என்றால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் அவற்றாலே?
தந்தை பெரியார் 24.11.1964
பச்சையப்பன் கல்லூரி பேருரை
No comments:
Post a Comment