சென்னை, ஜூன் 9 தமிழ்நாடு முழு வதும் கந்துவட்டிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தர விட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செல்வகுமார்(27) கந்துவட்டி தொடர்பான பிரச்சினை யில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனியும் இதுபோன்ற அசம்பா விதங்கள் நேரிடாமல் தடுக்கும் வகை யில், கந்துவட்டிக்கு எதிராக ‘ஆப ரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு, மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:
கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆகி யோர், `அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003'-இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்துவட்டிப் புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.
கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த வர்கள், பொதுமக்களிடம் வசூலித்த வட்டித் தொகை எவ்வளவு என்பது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக உரியசட்ட ஆலோ சனை பெற்று, வழக்குபதிவு செய்ய வேண்டும்.
கந்துவட்டிக்கு விடுபவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, அவர்கள் வைத்திருக்கும் கந்து வட்டி தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்ற வேண்டும்.
கையெழுத்து போடப்பட்ட வெற்று பேப்பர்கள், கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் இருந்தால், அவைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
கந்துவட்டி தொடர்பான இந்த நடவடிக்கைகளுக்கு ‘ஆபரேஷன் கந்து வட்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை காவலர்கள் திறம்பட மேற்கொள்ள வேண்டும்.
கந்துவட்டி தொடர்பான நடவடிக் கைகளில் சிறப்பாகவும், முன்மாதிரி யாகவும் பணியாற்றுபவர்களுக்கு, அதற்குரிய அங்கீகாரம் தனித்தனியாக அளிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு குறிப்பிட் டுள்ளார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கை கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வசிக்கும் எல்லைக்கு உட் பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என்றும், அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment