சென்னை, ஜூன் 8 சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து திரிசூலம் புறநகர் மின்சார ரயில் நிலையத் துக்கு பயணிகள் சுலபமாக செல் லும் வகையில் ரூ.80 லட்சம் செல வில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரூ.1 லட்சம் மதிப் பீட்டில் பாலூட்டும் தாய்மார் களுக்கான தனி அறை, ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் காற்றிலிருந்து குடிநீர் எடுக்கும் இயந்திரம் ஆகி யவை அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) பொதுமக்களின் பயன் பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இதுகுறித்து, ராஜேஷ் சதுர் வேதி மேலும் தெரிவித்ததாவது: சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பொது தளத்தில் இருந்து நடைமேடை வரை செல்ல 2 நகரும் படிக்கட்டுகள் இம்மாதம் இறுதிக்குள் அமைக்கப் படும்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 36 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சில ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் புது முயற்சியாக காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் நவீன இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் வளிமண்டல காற்றை குடிநீராக மாற்றுகிறது. இக்குடிநீர் 100 சதவீதம் தூய்மை யானது. குடிப்பதற்கு மிகவும் ஆரோக்கியமானது. இவ்வாறு ராஜேஷ் சதுர்வேதி கூறினார்
No comments:
Post a Comment