என்னை இங்கே பாராட்டுவதாகக் கூறி அவர்கள் தலைமையேற்றிருக்கின்ற திராவிடர் கழகத்தின் சார்பாக பாராட்டு என்று கூறி இந்த விழாவிற்கு அமெரிக்காவில் இருந்து கூட நண்பர்களெல்லாம் வருகை தந்து ஆன்றோரும், சான்றோரும், கவிஞர் பெருமக்களும் திரண்டிருக்கின்ற இந்தப் புகழ்பெற்ற மைதானத்தில் மேலும் எனக்குப் புகழ் சேர்க்கின்ற வகையில் பல கருத்துகளை வாரி. இறைத்திருக் கின்றார்கள்.
நான் இதற்கு உரியவன்தானா? இதை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு எனக்குத் தகுதி உண்டா என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால் தகுதி உண்டு உரியவன் எப்படி என்றால், இவையெல்லாம் தந்தை பெரியார் அவர்களைச் சேரக்கூடியவை பெரியார் அவர்களுக்கே உரியவை என்பது ஒத்துக் கொள்ளப்படுமேயானால், இவை எனக்கும். உரி யவை என்று கூறுவதிலே எந்தவித அய்யப்பாடும் எனக்கில்லை.
இடமருகு என்ற எழுத்தாளரால் வரையப்பட்ட அருமையான நூல், நூலுக்குத் தலைப்பு ‘இவர்தான் நாராயண குரு - நாராயண குரு என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் அவர் கேரளத்தில் பிறந்தார் பெரியாருக்குச் சமமாக என்று சொல்லமாட்டேன் பெரியார் அளவுக்கு என்று நான் கூறமாட்டேன் ஏனென்றால் பெரியார் எனக்குத் தலைவர் என்ற காரணத்தால் அல்ல.
பெரியார் செய்த புரட்சி உலகத்திலேயே எங்கும் யாரும் இதுவரையிலே செய்யவில்லை என்ற காரணத்தினால் யாரையும் நான் பெரியாருக்கு ஒப்பிட்டுக் கூறமாட்டேன்.
- தஞ்சையில் 12.08.2008 அன்று நடைபெற்ற விழாவில்
தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர்
No comments:
Post a Comment