நாகர்கோவில், ஜூன் 4 செஞ்சி மாநாட்டில் குடும்பத்தோடு பங்கேற்க குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து நடைபெற்ற குமரிமாவட்ட பகுத்தறிவாளர்கழக கலந்துரையால் கூட்டத் திற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலை வர் உ..சிவதாணு தலைமை தாங்கினார். கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந் தன் மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ் வரவேற்றார். திமுக தொழிற் சங்க நிர்வாகி க.வ. இளங்கோ, திராவிடர்கழக கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பா.பொன்னுராசன், ச.ச.மணிமேகலை ஆகி யோர் கருத்துரையாற்றினர். கழகத் தோழர்கள் வில்லுக்குறி செல்லையா, கன்னியாகுமரி யுவான்ஸ், ஆபிரகாம் லிங்கன், சியாமளா மற்றும் கழகத் தோழர்கள், பெரியார் பற்றா ளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஜூன் 8,9,10,11 ஆகிய நாள்களில் குற்றா லத்தில் நடைபெற உள்ள பெரியாரியல் பயிற்சி முகாமிற்கு குமரிமாவட்டத்தில் இருந்து அதிக மாணவர்களை பங்கேற்க வைப்பது எனவும்,
ஜூன் 19 செஞ்சியில் நடைபெற உள்ள பகுத்தறிவாளர்கழக மாநாட்டில் தோழர்கள் குடும்பத்தினரோடு பங்கேற்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment