தரமணி கோ.மஞ்சநாதன் படத்திறப்பு கழகத் துணைத் தலைவர் - பொதுச்செயலாளர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

தரமணி கோ.மஞ்சநாதன் படத்திறப்பு கழகத் துணைத் தலைவர் - பொதுச்செயலாளர் பங்கேற்பு

தரமணி, ஜூன் 29 கடந்த 27.06.2022, திங்கள் கிழமை, மாலை 3.30 மணி அளவில் தரமணி பெரியார் நகர், கம்பர் தெருவிலுள்ள பெரியார் இல்லத்தில் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையிலும் சுயமரியாதைச் சுடரொளி கோ.மஞ்சநாதனின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்று பேசினார்.

  சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன் தொடக்க உரையாற்றினார்.

 அதனைத் தொடர்ந்து தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், வழக்குரைஞர் 

ஒ. சுந்தரம் ஆகியோர் சுயமரியாதைச் சுடரொளி மஞ்சநாதனின் நினைவைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினர்.

கழகத் துணைத் தலைவர் உரை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சுயமரியாதைச் சுடரொளி கோ.மஞ்சநாதனின் படத்தை திறந்து வைத்து அவரின் தொண்டினைப் பாராட்டி பேசியதோடு, அவருடைய எதிர்பாராத மறைவு கழக குடும்பத்தினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்றும், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி அவருடைய குடும்பத்தினர் செயல்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை கழகம் எப்போதும் செய்ய தயாராக உள்ளது என்றும் கூறினார்.

'இந்த சமூகத்திற்கு தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினையும் அதனால் இந்த சமூகம் அடைந்த பலன்களையும் விளக்கி பேசி, பார்ப்பனர்கள் இறப்பை கூட விட்டு வைக்காமல் மூடப்பழக்க வழக்கங்களை திணித்து நம்முடைய சிந்தனையை மழுங்கடித்து பணம் பறித்து வாழ்ந்து வருகிறார்கள்'  என விளக்கி கருத்துரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர் உரை

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு: 

  "சுயமரியாதைச் சுடரொளி அருமை தோழர் மஞ்சநாதன் அவர்களுக்கு செலுத்த வேண்டிய கடமையும் -  பொறுப்பும் செலுத்த வேண்டியவர் என்ற அடிப்படையில் தான் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் படத்தினை திறந்து வைத்துள்ளார்.

  திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர் ஒருவரின் மறைவு என்பது ஒரு சமூகப் போராளியின் மறைவு! அந்த மறைவின் தாக்கம் அந்த குடும்பத்தை விட சமூகத்தையே வெகுவாக பாதிக்கிறது. அந்த அடிப்படையில் சுயமரியாதைச் சுடரொளி மஞ்சநாதன் அவர்களின் மறைவு சமூகத்திற்கே பேரிழப்பாகும்.

திராவிட இயக்க சிந்தனைகளில் துளி அளவும் மாறுபடாமல் கழகத்தில் இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். சராசரி மனிதர்களை விட கருப்புச்சட்டை தோழர்களுக்கு வரும் இன்னல்கள் ஏராளம்; குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், வயதானவர் என்றால், உடல் உபாதைகள் என்று எந்த சிக்கல் வந்தாலும் துணிச்சலோடு, தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எந்த விலையும் கொடுக்க தயார் என்று வாழக்கூடிய கொள்கை சீலர்கள் வரிசையில் வாழ்ந்தவர் அய்யா மஞ்சநாதன் அவர்கள்.

  என்னுடைய கொள்கை தான் எனக்கு முக்கியம்; அதில் தடுமாற்றம் இருக்காது என்று கடைசி வரை வாழ்ந்தவர். இவ்வளவு சீக்கிரம் அவரை இழப்போம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. பெரியார் திடலில் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் எப்படியும் பார்த்து விடுவோம், அந்த அளவிற்கு நெருக்கமானவர் அய்யா மஞ்சுநாதன் அவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்தி அவருக்கு அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களுக்கு முடிந்த அளவு துணையாக இருந்து பாதுகாத்து தான் வந்தோம்! அப்பொறுப்பை நம்முடைய இரா.வில்வநாதன் ஆர்.டி.வீரபத்திரன், செ.ர.பார்த்தசாரதி உள்ளிட்டவர்கள் கவனித்து வந்தனர்.

மகத்தான தோழரை இழந்து நிற்கிறோம்! யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை! உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன், சமூகப் பார்வையுடன் வாழுங்கள் - தொண்டற மனப்பான்மையோடு வாழ்ந்து வழிகாட்டுங்கள். அது தான் நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு சுயமரியாதைச் சுடரொளி கோ.மஞ்சநாதன் அவர்களுக்கு தலைமை கழகத்தின் சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உரையாற்றினார்.

பங்கேற்றோர்

சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் அ. விஜய் உத்தம்ராஜ், அமைப்பாளர் குழ.செல்வராஜ், துணைத் தலைவர் தமிழினியன், சோழிங்கநல்லூர் பகுத்தறிவாளர் கழக தலைவர் பி.சி.ஜெயராமன், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன் மற்றும் சா. தாமோதரன், ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்செல்வன், திராவிடர் தொழிலாளர் பேரவை பொருளாளர் கூடுவாஞ்சேரி இராசு, தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.இரா.மாணிக்கம், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், இளைஞர் அணி செயலாளர் ந.மணிதுரை, வீ.கதிரவன், வீ.இரமணதிலகம், இராஜேந்திரன், குமார், நங்கநல்லூர் பி.மோகன், பச்சை, கோடம்பாக்கம் ச.மாரியப்பன், சூளைமேடு ந. ராமச்சந்திரன், பிடிசி இராஜேந்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், சோமங்கலம் க.பாலமுரளி, பூவிருந்தவல்லி பெரியார் மாணாக்கன், கலைமணி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா. மணியம்மை, மஞ்சநாதன் அவர்களின் மகள்கள் ஆனந்தி, சவுந்தரி மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

மஞ்சநாதன் அவர்களின் மகன் தரமணி ம.ராஜி பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment