ஆரியர்-திராவிடர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

ஆரியர்-திராவிடர்

 

கேள்வி :  ஆரியர் - திராவிடர் போராட்டம் தொடர்கிறது என்று குறிப்பிட்டு வருகிறீர்கள் - எந்த அடிப்படையில்?

கலைஞர் : திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான பகுத்தறிவு. சுயமரியாதை, இடஒதுக்கீடு. மூடநம்பிக்கை எதிர்ப்பு போன்றவை இன்றைக்கும் ஒருசில குறிப்பிட்ட நபர்களின் சூழ்ச்சியால் சோதனைக்கு உள்ளாகும்போது. ஆரியர் - திராவிடர் போராட்டம் தொடர்கிறது என்று சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

கேள்வி :  திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லிக் கொண்டு சிலர் புறப்பட்டுள்ளார்களே?

கலைஞர் : ஆரியத்தால் வீழ்ந்தோம் என்பதற்குப் போட்டியாக சிலர் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று புறப்பட்டுள்ளார்கள். திராவிடத்தால் தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் வீழாது! எனவே, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று இப்போது சொல்பவர்களே. கடந்த காலத்தில் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்ற நிலையிலே இருந்தவர்கள்தான்!

- ‘விடுதலை’ பொன்விழா மலர் - 17.09.1985


No comments:

Post a Comment