மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிவகங்கை மண்டல தலைவர் சாமி திராவிடமணி சந்தித்து வாழ்த்து தெரிவித்து பெரியார் களஞ்சியம் நூலினையும் வழங் கினார். உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி.
மதுரையில் நடைபெற இருக்கும் கழக பொதுக் குழு கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடி துரை.எழில் விழியன் ரூ.5000 நன்கொடை வழங்கி சிறப்பாக நடைபெற வாழ்த்தினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சாலைவேம்பு கிராமம் கழக பொதுக்குழு உறுப்பினர் சாவித்திரி சுப்பையன், "தி மாடர்ன் ரேசனலிஸ்ட் " ஆண்டு சந்தா ரூ. 500 மற்றும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டு நிதியாக ரூ. 5000 - ஆக மொத்தம் ரூ. 5500 தொகையினை பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தருமன் வீரமணியிடம் மகிழ்வுடன் வழங்கினார்.
No comments:
Post a Comment