அப்படியே குப்பைக்குப் போகக் கூடியவை பைனாப்பிள் இலைகள். ஆனால், அவை உடலில் அதிகம் கொழுப்பு சேராமல் தடுக்கும் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பைனாப்பிள் இலைகளை உலர்த்தி, பொடியாக்கி மாத்திரையாக்கினர் விஞ்ஞானிகள்.பின்னர், மனித ஜீரண அமைப்பின் மாதிரியை உருவாக்கி, அதில் மாத்திரையை செலுத்தினர். அந்த மாதிரியில் செரிமான அமிலம் உள்ளிட்டவை இருந்தன. இதன் ஊடாக, மாத்திரைகள் நகரும்போது ஒரு அதிசயம் நடந்தது.
சமைத்த கொழுப்பு உணவுகளில் இருக்கும் கொழுப்பை அந்த குளிகைகள் உறிஞ்சிக் கொண்டன. எவ்வளவு தெரியுமா? ஒரு கிராம் பைனாப்பிள் இலைப் பொடி, 45.1 கிராம் அளவு கொழுப்பை உறிஞ்சியது. பிறகு அந்த குளிகை, கொழுப்பு கலந்த உருண்டையாக மாறி, ஜீரண உறுப்பைக் கடந்து வெளியேறியது. இன்னும் இந்த கண்டுபிடிப்பு மனிதர்கள் மீது சோதிக்கப்படவில்லை. ஆனால், இந்த மாத்திரை சந்தைக்கு வந்தால், உடல் பருமனைக் குறைக்க உதவும்.
No comments:
Post a Comment