2001ஆம் ஆண்டு நவம்பரில் ஆங்கில ஏடு சார்பில் (இந்துஸ்தான் டைம்ஸ்) கலைஞரிடம் சிறப்புப் பேட்டி எடுத்தனர். அதில் கடைசியாகக் கேட்கப்பட்ட கேள்வி இது.
உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய இலட்சிய வெற்றி எதுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
கலைஞரின் பதில் இது.
ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சுக் கேட்க வந்து குழுமியிருப்போர் அனைவரும் தமிழர்களாக இருக்கிறார்கள். ஆனால் கூட்டம் முடிந்து கலைந்து செல்லும்போது தனித்தனி ஜாதிகளாகக் கலைந்து செல்கிறார்கள். அந்த நிலை மாறி, தமிழர்களாகவே கூட்டத்தில் அமர்ந்து எழுந்து செல்லும்போதும் தமிழர்களாகவே கலைந்து செல்லும்காலம் வந்தால் அதுதான் நான் எதிர் பார்க்கும் இலட்சிய வெற்றி என்பதாகும்.
No comments:
Post a Comment