பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு உயிர் கொடுத்த உத்தமத் தியாகி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு உயிர் கொடுத்த உத்தமத் தியாகி

பகுத்தறிவு இயக்கம் ஏதோ பன்னீரில் குளிப்பது போன்றதும். பஞ்சனை மெத் தையில் படுத்துச்சுகம் காண்பது போன்ற தும், தென்றல் வந்து உடல் தழுவ தெம் மாங்குத் தேனிசையில் இதயம் பறி கொடுப்பது போன்றதும், ‘மாசில் வீணை யும் மாலை மதியமும், வீசுதென்றலும் வீங்கிள வேனிலும் மூசுவண்டறைப் பொய்கையுமான சுகபோகம் போன்றதும் அல்ல, மாறாக அக்கினி ஆற்றின் குறுக்கே மயிர்ப்பாலம் மீது நடப்பது போன்றதும், ரத்தக் கடலைத் தாண்ட பிணக்கப்பலில் பயணம் செய்வது போன்றதும், தீயையே தென்றலாகத் தழுவுவது போன்றதுமான கோர நிலைமை: கொலையே பரிசு அதற்கு!

 இத்தகைய பகுத்தறிவுப் பணிக்காகத் தங்கள் இன்னுயிர் ஈந்த உத்தமர் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளம் ஏராளம்! அதிலும் அய்ரோப்பாக் கண்டத்திலோ இவர்களின் பட்டியல் நீளமானது மிகமிக, நீளமானது!

“உலகம் உருண்டை வடிவ மானது; தட்டையானதல்ல” என்றால் தலை சீவப்படும். 

“சூரியன் பூமியைச் சுற்ற வில்லை; பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது” என்றால் அதற்குப் பரிசு மரண தண்டனை. தெய் வத்தை  மதத்தை புராணத்தை மத குருவை நிந்தனை செய்தால் அந்த நாக்கே துண்டிக்கப்படும்.

இப்படியாக உயிர் பலி தந்து பகுத் தறிவை வளர்த்த உத்தமர் வரிசையில் இடம் பெறுபவர்களில் ஒருவர் தாமஸ் அய்க்கன் ஹெட் ஆவார். 

பிரிட்டனில் 1678 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமது உயர் கல் வியை எடின்பரோ பல்கலைக்கழகத்தில் கற்று வந்தார். அப்போதுதான் அவரது இதயம் இயற்கை. மதத்தின் பால் கவர்ச் சிக்கப் பெற்றது. உருவ வழிபாடு மத குரு மார்களின் புரட்டு என்பது இம்மதத்தின் கொள்கை  வேறு பலரைப் போல இக்கொள் கையை ரகசியமாகக் கடைப் பிடித்து வந்தவரல்ல அய்க்கன் ஹெட் பகிரங்கமாக இக்கொள் கைகளைப் பிரச் சாரம் செய்து வந்தார். இதனால் மிரட்சிய டைந்த மதச் சபையின் தூண்டு தல் விரைவில் வேலை செய்தது. அய்க்கன்ஹெட் கைது செய்யப்பட்டார். மதத் துவேஷம் செய்ததாக, தெய்வ நிந் தனை புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டது.

தாம் தெய்வ நிந்தனையோ, மதத் துவேஷமோ செய்யவில்லை என்று அய்க்கன்ஹெட் கோர்ட்டில் வாதாடினார். மதத்திருச் சபையின் பாதிரிகள் தூண்டு தலின்பேரில் அரசுத் தரப்பு வக்கீல் சட்டங் களை அடுக்கடுக்காக மேற்கோள் காட்டித் தூக்குத் தண்டனை தவிர, வேறு எந்தத் தண்டனையும் இதற்கு இல்லை என்று பிடிவாதம் காட்டினர். கோர்ட் என்ன செய்யும்? சட்டப்படி அய்க்கன்ஹெட் குற்றவாளி என்று முடிவு செய்தது. 1697ஆம் ஆண்டு தமது 19ஆம் வயதில் அந்த பிஞ்சு உடம்பு தூக்குமரத்தில் ஏற்றப்பட்டது.

அய்க்கன்ஹெட் பகுத்தறிவு வரலாற் றில் அழியாத இடம் பெற்ற மாணவத் தியாகி. மெக்காலே (Macaulay) எழுதிய இங்கிலாந்து வரலாறு (History of England) என்ற நூலிலும், ஹோவெல் (Howell) எழுதிய ‘அரசு வழக்குகள்’ (State Trials) என்ற நூலிலும் அய்க்கன் ஹெட்டின் வரலாற்றைப் படிப்பவர்கள் மதவாதிகளின் ஈரமற்ற கொடுமையையும், பகுத்தறிவாளரின் வீரத் தியாகத்தையும் நாடகம் போலக் காணலாம் இங்கிலாந்தில் உயிர்ப்பலி கொடுத்த பகுத்தறிவாளர்களில் இவரே கடைசி என்பது குறிப்பிடத்தக்கது:


No comments:

Post a Comment