கோல்வால்கர் என்ன சொல்கிறார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

கோல்வால்கர் என்ன சொல்கிறார்?

‘ ‘இன்று ஹிந்து சமுதாயத்தின் வருண அமைப்பு முறை உருத்தெரியாத அளவிற்குக் கெட்டு விட்டது. காலப் போக்கில் ஏற்பட்ட தீய சக்திகளால் வருண முறை பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்துடன் இன்று ஜாதி முறையை வானளாவப் பேசிக் கண்டிக்கும் கூட்டத்தாரின் போக்கினாலேயே ஜாதிமுறைக் கட்டுப்பாடு இறுகிவரக் காண்கிறோம்.''

‘‘அரசாங்க நிர்வாக அமைப்புக்கூட இந்த வேற்றுமையை வலியுறுத்தப் பயன்படுத்தப்படு கின்றது.''

‘‘நமது சமுதாயத்தின் ஒரு சாராருக்கு ஹரிஜனங்கள், பின்தங்கிய ஜாதியினர் என்று பெயரிட்டு, அவர்களுக்காக தனிச் சலுகை களைப் பகட்டாக வழங்கி, அதனால் அவர் களைச் செல்வத்திற்கு அடிமை ஆக்குவதன் மூலம், நம் சமுதாயத்தில் பிரிவினை உணர்வும், பொறாமையும், சச்சரவும் வளர்க்கப்படுகின்றன.''

 ‘ ‘இந்த விஷ உணர்வு எந்த அளவிற்கு நமது சமுதாயத்தில் ஊறிப் போயுள்ளது என்பது, சில ஆண்டுகட்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை நோக்கினால் தெரியவரும். புனாவிற்கு அருகில் ஆங்கிலேயர், பேஷ்வாக் களை வெற்றி கொண்டதை அறிவுறுத்தும் ஒரு  ‘வெற்றித் தூண்' உள்ளது. ஒரு சமயம் ஹரிஜனங்களின் புகழ்பெற்ற தலைவர் ஒருவர் இத்தூண் அருகில் தமது குலத்தவருக்கு ஒரு உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர், அத்தூண்  ‘ ‘ஹரிஜனங்கள், பிராமணர்கள் மேல் கொண்ட வெற்றியின் சின்னம்'' என்றார். ஏனெனில், ஹரிஜன வகுப்பினர்தாம் ஆங்கி லேயரின் கீழ் போரிட்டு, பேஷ்வாக்களை - பிராமணர்களை - தோற்கடித்தனர் என்றார். ஒரு பெரும் தலைவர், அருவருப்புத் தரும் அடிமைச் சின்னத்தை, வெற்றியின் சின்னம் என்று புகழ்ந்து கூறுவதும் நமது நாட்டவருக்கு எதிராக அன்னியனுக்கு அடிமையாக இருந்து சண்டை யிட்டதை ஒரு பெரும் சாதனை என பெருமையாக எண்ணுவதும் நெஞ்சைப் பிளப்பதாய் உள்ளதே!'' 

-கோரேகான் வரலாற்றை ஆர்.எஸ்.எஸ். எப்படி திசை திருப்புகிறது பார்த்தீர்களா?

புரிந்துகொள்ள இன்னுமா தயக்கம்?


No comments:

Post a Comment