பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு முதற்பதிப்பு 1934
பக்கங்கள் 184 - நன்கொடை ரூ.120
சிந்தனை சிற்பி என்று மக்களால் பாராட் டப்படும் தோழர் ம. சிங்கார வேலர் (1860 - 1946) ஒரு சீர்திருத்த வாதி! பொது வுடைமை சிந்தனைகளை தமிழகத் தில் விதைத்தவர். பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தோடு பயணித் தவர். பெரியாரின் ‘குடிஅரசு‘ இத ழில் தொடர்ந்து பகுத்தறிவு, விஞ்ஞான கட்டுரைகளை எழுதி வந்தவர் !
சிங்கார வேலர் மறைவதற்கு முன்பாக, தான் சேகரித்து வைத் திருந்த பத்தாயிரம் அரிய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அன்பளிப்பாக கொடுத்தார்! பல பகுத்தறிவு, விஞ்ஞான பூர்வ நூல்களை எழுதியுள்ளார். அந்த வரி சையில் இந்த நூலும் சிறப்பான நூல்களில் ஒன்று !
பெரியார் இந்நூலின் முன்னுரையில் (20.07.1934) குறிப்பிடும் போது - “ பொது ஜனங்கள் பல மூலைகளிலிருந்து தோழர் சிங்கார வேலுவை சரமாரியாக கேள்விகள் பல கேட்க ஆரம்பித்தார்கள். அவைக ளுக்கு பதிலளிக்கும் விதமாக, அவரது விஞ்ஞான ஆராய்ச்சி மக்களுக்கு சுளுவில் ஞானம் ஊட்டப்படுவதாக இருப்பதால், இதை நாம் வெளியிடச் செய்தோம்! மூட நம்பிக்கையில் ஆட்பட்டு விடுதலை பெற முடியாமல் தவிக்கும் நமது இந்திய மக்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படித்து பயன் பெற வேண்டு மென்று கேட்டுக் கொள்கி றேன்!"... என வேண்டுகோளாக தெரிவித்து உள்ளார்!
ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பே, 1934ஆம் ஆண்டிலேயே சிந்தனை சிற்பி சிங்கார வேலர், மக்கள் தினந்தோறும் தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு விஞ்ஞானத்தின் அடிப்படையில், தெளிவாகவும் எளிதாகவும் பதிலளித்த விவரங்களை கொண்டது இந்த நூல். 22 கட்டுரைகளை பொருளடக்கமாக கொண்டுள்ளது.
மதங்களின் மூடக் கோட்பாடுகள் என்ற கட்டுரையில் - “மதக் கோட்பாடுகள் (Religious Doctrines) என்பது ருசுவற்ற கற்பனைகள்(unverified hypothesis) மற்றும் விஞ்ஞான உத்தேசங்களோ(Scientific hypothesis) ருசுவுள்ள கற் பனைகள் (verified hypothesis) என்றும், இந்த கற்பனைகள் ருசுபெற, ருசுபெற கற் பனைகளிலிருந்து சித்தாந்தங் கள் ஆகின் றன! இதுவே மதக் கோட்பாடுகளுக்கும் விஞ்ஞான கோட்பாடுகளுக்குமுள்ள வேற் றுமை!"...என ஒரு அறிவியல் ஆசிரியரைப் போல விளக்கு கிறார்!
ஆன்மீகத்திற்கும் விஞ்ஞா னத்திற்கு முள்ள வேறுபாட்டை மிக எளிதாக புரிய வைக்கிறார் - “தெரியாமையை தெரியாமை யால் கொண்டு விளக்க முயலும் செயலுக்கு ஆன்மீகம் என்று பெயர்! தெரியாத பொருளை தெரியப்படுத்த, தெரிந்த பொருளை சொல்லி விளங்க வைப்பதுவே விஞ்ஞானமாகும்!".
விஞ்ஞான முறையும் தத்துவ ஞான மூடநம்பிக்கையும் என்ற விரிவான கட்டுரையில் - “சாதாரண மக்கள் மதங்கள் கூறும் மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடக் கின்றார்கள். கல்வி கற்றோரோ தத்துவ ஞானப் பித்துகளில் உழல்கின்றனர் !"...என சமூக அக்கறையோடு தனது வருத்தத்தை தெரிவிக்கிறார் !
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், சிந்தனை சிற்பி சிங்கார வேலர் போன்ற சீர்திருத்த வாதிகள் தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டாக பேசியும் எழுதியும் வந்த காரணங்களால் மட்டுமே, நாம் இன்று ஓரளவாவது மூட நம்பிக்கைகளிலிருந்து வெளியே வந்திருக்கிறோம்! அந்த வகை யில் இந்த நூல் பகுத்தறிவாளர்களின் ஆயு தமாக விளங்குகிறது !
சிந்தனை சிற்பி சிங்கார வேலர் நமது சிந்தனைகளில் என்றும் வாழ்கிறார்!
பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர், சென்னை.
No comments:
Post a Comment