நமது நாட்டில் வேறு எந்தத் தொண்டு செய்வதானாலும் மக்களுக்கு இடமுண்டு. ஆனால் மனிதச் சமுதாயத் தொண்டு செய்வதானால் மக்களுக்கு இடமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மனிதச் சமுதாயத்தில் நம் நாட்டைப் பொறுத்தவரையில் மேல் கீழ் என்ற தன்மையில் வகுப்புக்கள் பிரிக்கப்பட்டு விட்டதால் அப்பிரிவின்படி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மக்கள் வாழ்ந்து பழக்கமும் சகிப்பும் ஏற்பட்டுவிட்டதால் உயர்வு தாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் பங்கு ஏற்பட்டுவிட்டதால் உயர்வு தாழ்வை ஒழிக்கும் உணர்ச்சி தோன்றாவிட்டாலும் யாருக்காவது தோன்றி அத்தொண்டாற்ற யாராவது வந்தாலும் அதைச் செய்யவும் சகிக்கவும், அதற்கு இடம் கொடுக்கவும் முடியாத நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருப்பதோடு கூடுமான அளவு எதிர்க்கவும் வேண்டியவர்களாக ஆகி விடுகிறார்கள். அதனாலேயே இந்த நாட்டில் இந்த இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளாக மனிதச் சமுதாயத்தொண்டு செய்ய யாருமே எவருமே ஏற்படவில்லை என்பதோடு ஏற்பட முடியாமலும் போய்விட்டது.
- தந்தை பெரியார்
No comments:
Post a Comment