கோயில் நிலங்கள் அளவீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

கோயில் நிலங்கள் அளவீடு

 உத்திரமேரூர், ஜூன் 2- காஞ்சிபுரம் மாவட்டம், உத் திரமேரூர் ஒன்றியம் திருப் புலிவனத்தில் கோயில் களுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாம் கட்டமாக அளவீடுகள் செய்யப்பட்டன. அந்தப் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன் பரசன், இந்து சமய அற நிலையத் துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு ஆகி யோர் தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட் டம் உத்திரமேரூர் ஒன் றியம் திருப்புலிவனத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் இரண்டாம் கட்டமாக அளவிடும் பணிகள் நேற்று (1.6.2022) நடைபெற்றன.

இந்த அள விடும்பணி களை ஆய்வு செய்த அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியது:

தமிழ்நாடு அரசு பொறுப் பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் முன்பு எப்போ தும் இல்லாத அளவுக்கு பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு சொந்தமான இடங் களை, ரோவர் கருவி வாயிலாக, நில அளவை செய்து, நிலங்களை முழு மையாக பாதுகாக்கும் பணியை செய்து வருகி றோம்.

இதன் ஓர் அங்கமாக தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 9.27 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் 1 லட்சம் ஏக்கருக்கான கோயில் நிலங்கள் அளவிடும் பணி நிறைவு பெற உள்ளது. இதற்கென 150 பணியாளர்கள் நிய மிக்கப்பட்டு அவர்கள் 50 குழுக்களாகப் பிரிந்துநில அளவிடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனை மேலும்விரிவு படுத்தும் வகையில் 66 குழுக்கள் செயல் படுத்தப் படவுள்ளன. விரைவில் இதனை 100 குழுக்களாக உயர்த்த முடிவு செய்துள் ளோம். கோயில் நிலங்கள் அனைத்தும் நில அளவீடு செய்யப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.கும ரகுருபரன், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் க.சுந்தர், சி.வி.எம். பி.எழிலரசன், அரசுஅலு வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment