சிவகங்கை, ஜூன் 9 நிகழ் காலத்தில் மட்டுமல்ல... வருங் காலத்திலும் வளமான தமிழ் நாட்டிற்கு வழி வகுப்போம் என திருப்பத்தூர் அருகே காரையூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வேங்கை பட்டியில் ரூ.3.17 கோடி மதிப் பில் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடு களை பயனாளிகளுக்கு ஒப் படைக்கும் விழா நேற்று (8.6.2022)நடைபெற்றது. விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும், பெரியார் சிலை, மேனாள் அமைச்சர் செ.மாதவன் நினைவு நூலகம், ரேஷன் கடை, அங்கன் வாடி மய்யம், விளையாட்டுத் திடல் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் சமத் துவபுர வீடு பயனாளிகளுக்கு சாவி வழங்கினார்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் அருகே காரையூரில் நடை பெற்ற அரசு விழாவில் பங்கேற்று ரூ.24.77 கோடி செலவில் 44 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். ரூ.119.68 கோடி மதிப்பீட்டி லான 127 புதிய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டினர். பின்னர் 59 ஆயிரத்து 162 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சிங்கம்புணரி ஒன்றியம் கோட்டை வேங்கைப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவ புரத்தை திறந்து வைத்துள் ளேன். சிவகங்கை மாவட்டத் தில் 9 சமத்துவபுரங்கள் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அதில் 8 சமத் துவபுரங்கள் திறக்கப்பட்டன. ஒரு சமத்துவபுரம் மட்டும் திறக்கப்படாமல் இருந்த நிலையில் மீண்டும் பராமரிப்பு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை எப்படியெல் லாம் பாழ்படுத்தினார்கள் என்பதற்கு இந்த விழாவே சான்று. அதிமுக ஆட்சி மக் களுக்கான ஆட்சியாக இல்லா மல் அரசியல் உள்நோக்கத் தோடு செயல்படும் ஆட்சியாக இருந்தது.
திராவிட மாடல்
அரசு செலவு செய்யக் கூடிய ஒவ்வொரு பைசாவும் கடைக் கோடியில் உள்ள குடிமகனுக் கும் செல்ல வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம், லட்சியம். இந்த திட்டங்களுக் கெல்லாம் கூட்டாக ஒரு பெயரிட வேண்டும் என்றால் அது தான் திராவிட மாடல். ஒவ்வொருவருக்கும் திட் டங்கள் சென்று சேர வேண் டியதை ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் நாள்தோறும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். திமுக அரசு அமைந்த பிறகு தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து வருகிறேன். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வழியெங்கும் நின்று சாலை யோரங்களில் ஆர்வத்தோடு கையசைத்து, அவர்கள் வெளிப் படுத்தக்கூடிய மகிழ்ச் சியை பார்க்கும்போது இது தான் இந்த ஆட்சிக்கும், எனக்கும் தரக்கூடிய நற்சான்று என கருதுகிறேன். முதல மைச்சர் நம்பர் 1, நம்பர் 2 என்பது பற்றி எனக்கு கவலையில்லை.
தமிழ்நாடு சமுதாயத்திற்கு....
தமிழ்நாடு நம்பர் ஒன் ஆக வர வேண்டும் என்பதுதான் என் லட்சியம். ‘‘தமிழ் சமுதாயத்திற்கு முடிந்த வரை உழைத்து விட்டேன். எனக்கு பிறகு யார் என்று கேட்டால் தம்பி ஸ்டாலின் தான்’’ என தலைவர் கலைஞர் ஒரு முறை கூறினார்.
அந்த நம்பிக்கையை இந்த ஓராண்டு காலத்தில் நான் காப்பாற்றியுள்ளேன். இனியும் தொடர்ந்து காப்பாற்றுவேன். அய்ந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை இந்த ஓராண் டில் செய்திருக்கிறோம். நீங்கள் நினைக்கலாம் இது ஆரம்பக் கட்ட வேகம், எல்லோரும் இப் படித்தான் அறிவிப்பார்கள் என்று?. ஆனால் எப்போதும் இதே வேகம், சுறுசுறுப்புடன் தான் நான் இருப்பேன். மக்கள் என் மீது வைத்திருக்கும் அன் பும், பாசமும் தான் என்னை இத்த கைய சுறுசுறுப்போடும், வேகத் தோடும் பணியாற்ற வைக்கிறது.
தமிழ் தொண்டு
ஒவ்வொருவரும் காட்டக் கூடிய அன்பிலும், அரவணைப் பிலும் தான் தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணும். தமிழினம் எத்தனை ஆயிரம் ஆண்டு பழமையானது என்பதற்கு எடுத்துக்காட்டாக, தமிழர்களின் தாய் மடியாக உள்ள கீழடி அமைந்துள்ள மாவட்டம் தான் சிவகங்கை மாவட்டம். அந்த கீழடியின் தொன்மையையும், அதன் மூலம் தமிழகத்தின் கடந்த கால பெருமையையும் மீட்ட அரசுதான் இந்த அரசு. தமிழ் நாட்டின் தொன்மையை, பெரு மையை பேசுவோம். நிகழ்கால மக்களை அனைத்து வகையி லும் மேம்பட வைப்போம். அது தான் திமுக அரசு. தமிழ் தொண்டு, தமிழினத்தொண்டு, தமிழ்நாட்டு தொண்டு ஆகிய மூன்றையும் ஒரு சேர நிகழ் காலத்தில் மட்டுமல்ல, வரும் காலத்திலும் வளமான வாழ்க் கைக்கு, வளமான தமிழ்நாட் டிற்கு வழி வகுப்போம் என்ற உறுதியை இங்கு தெரிவிக் கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கலைஞரோடு ஒப்பிட்டது மிகப்பெரிய பாராட்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் ‘‘அண்மையில் கலைஞரின் சிலை திறப்பு விழாவுக்கு வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, கலைஞரை போல் திறமையாக ஆட்சி நடத்துவதாக என்னை ஒப் பிட்டு, பாராட்டி பேசினார். என்னுடைய வாழ்விலே
கிடைத்த மிகப்பெரிய பாராட் டாக இதை நான் கருதுகிறேன். கலைஞர் இடத்தை நான் நிரப்பி விட்டேன் எனக் கூறவில்லை. அவர் இடத்தை யாராலும், எந்த கொம்பனா லும் நிரப்பி விட முடியாது. ஆனால், அவரைப்போல் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில் கடந்த ஓராண்டு காலமாக என்னு டைய செயல்பாடு அமைந் துள்ளது’’ என்றார்.
முதலமைச்சருக்கு கீழடி நினைவுப்பரிசு
முதலமைச்சருக்கு சிவ கங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, கீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள், கிடைத்த பொருட் கள் போல் வடிவமைக்கப்பட்ட உலோகத்தால் செய்யப்பட்ட நினைவு பரிசு வழங்கினார். அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் வெள்ளி செங்கோலை முதலமைச்சருக்கு நினைவு பரிசாக வழங்கினார்.
வேலுநாச்சியார் பெயரில் பெண் காவல் படை பயிற்சி மய்யம்
சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில் பெண் காவல் படை பயிற்சி மய்யம் அமைக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை வைத்தார்.
இதற்கு மேடையில் பதில ளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், ‘‘இந்த கோரிக்கை குறித்து இரவு சென்னை சென்றதும் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் பேசி, பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
No comments:
Post a Comment