கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் காலிப் பணியிடங்கள்

கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.

காலியிடம் : வெல்டர் கம் - பிட்டர் 206, பிட்டர் 16, சீனியர் ஷிப் டிராப்ட்ஸ்மேன் 16, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5, ஷிப்ரைட் வுட் 3, அசிஸ்டென்ட் 7, ஜூனியர் கமர்சியல் அசிஸ்டென்ட் 2, ஸ்டோர்கீப்பர் 4, ஆய்வக உதவியாளர் 2 என மொத்தம் 261 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது : 6.6.2022 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ.400. தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள் : 6.6.2022

விவரங்களுக்கு : https://cochinshipyard.in



No comments:

Post a Comment