தருமபுரி,ஜூன் 9- 12.06.2022 அன்று திருச்சியில் நடக்க இருக்கும் திராவிடர் கழக மகளிரணி - மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து, தருமபுரி மாவட்ட மகளிரணி - மகளிர் பாசறை கலந்து ரையாடல் கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மகளிர் பாசறை தோழர் சி.அறிவுமதி வரவேற்புரை யாற்றினார்.
நிகழ்வில் மகளிர் அணி தோழர்கள் மார்வாடி அ.சகுந்தலா, மஞ்சுளா, அருணா மற்றும் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கா. கவிதா அவர்கள் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
வழிகாட்டல் உரையாக தர்மபுரி மாவட்ட தலைவர் மு.பரமசிவம், நகர தலைவர் கரு.பாலன், மாவட்டச் செயலாளர் த.யாழ் திலீபன், தர்மபுரி பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சா. ராஜேந்திரன் உரையாற்றினர்.
கருத்துரையாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா. செல்லதுரை அவர்களும், மண்டல பகுத்தறிவு ஆசிரி யரின் அமைப்பாளர் இரா.கிருஷ்ண மூர்த்தி உரையாற்றினர்.
பயண திட்ட வழிகாட்டல் உரையை மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் நிகழ்த்தினார்.
கழக மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
தீர்மானம் 1 :
திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை மாநில கலந்துரை யாடல் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 50 மகளிரோடு தனிப் பேருந்தில் கலந்து கொள்வது எனத் தீர்மானிக்கப் படுகிறது.
தீர்மானம் 2 :
தருமபுரி மாவட்டத்தில் திராவிட மகளிர் பாசறை மற்றும் திராவிட கழக மகளிர் அணி கட்டமைப்பு செயல் பாடுகள் கிராமங்கள்தோறும் சென்று அடையும் விதமாகவும் கிராமங்களில் கிளைக் கழகங்களை புதிதாக உருவாக் குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் :
திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் ச. பூபதி ராஜா, மாரவாடி அர்ஜுனன், இளைஞரணி தோழர் பிரபாகரன், பெரியார் பிஞ்சுகள் சா, கி. வீரமணி, சா.கி. செம்மொழி அரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக நிகழ்விற்கு மகளிர் பாசறை தோழர் சங்கீதா நன்றியுரை யாற்றினார்.
No comments:
Post a Comment