பெரியாரியல் பயிற்சிப்பட்டறை வகுப்புகளில் நடைபெற்ற சிறப்பான பாடங்களும், இருபால் மாணவர்களின் பங்கேற்பும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

பெரியாரியல் பயிற்சிப்பட்டறை வகுப்புகளில் நடைபெற்ற சிறப்பான பாடங்களும், இருபால் மாணவர்களின் பங்கேற்பும்!

குற்றாலம். ஜூன் 9 குற்றாலம் விகேயென் மாளிகையில் 43 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப்பட்டறை மிகச்சிறப்பாகத் தொடங்கியது. பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தென்காசி குற்றாலத்தில் உள்ள வள்ளல் விகேயென் அரங்கில் 43 ஆம் ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை ஜூலை 8 முதல் 11 வரை ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாகத் தொடங்கியது. 

காலையில் பயிற்சிப்பட்டறையை பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அறிமுகம் செய்து வைக்க, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார். 

அதைத்தொடர்ந்து  ‘பெரியார் ஒரு அறிமுகம்’,  ’நீதிக்கட்சி வரலாறு’, ’தேசியக் கல்விக்கொள்கை’, ’பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு’,  ’பெரியார் பேணிய பெண்ணியம்’, ’ஜாதி ஒழிப்புப் போராட்டம்’ ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றது. 

நிகழ்வில் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் வகுப்பாசிரியர்களாகவும், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார்  தென்காசி மாவட்டத்தலைவர் த,வீரன், செயலாளர் முருகன், பேராசிரியர் பால்.ராஜேந்திரம்,  ராஜபாளையம் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, பகுத்தறிவாளர் கழகத் தோழர் கே.டி.குருசாமி, நெல்லை மாவட்டத் தலைவர் காசி, கீழப்பாவூர் அய்.ராமச்சந்திரன், நெல்லை மண்டலப் பிரச்சாரக்குழுத் தலைவர் டேவிட் செல்லத்துரை ஆகியோர் முகாம் ஒருங்கிணைப்பாளர்களாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

காலையில் முதல் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பான ’பெரியார் ஒரு அறிமுகம்’, பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு’ எனும் தலைப்புகளில் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ’நீதிக்கட்சி வரலாறு’ மற்றும் ‘ஜாதி ஒழிப்புப் போராட்டம் எனும் தலைப்புகளில் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், ‘தேசியக்கல்விக்கொள்கை’ எனும் தலைப்பில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், ’பெரியார் பேணிய பெண்ணியம்’ எனும் தலைப்பில் முனைவர் மு.சு.கண்மணி, "இணையவெளியில் நமது செயல்பாடுகள்" எனும் பொருளில் தொழில்நுட்பக் குழுத் தலைவர் திருச்சி வி.சி.வில்வம் ஆகியோர் வகுப்புகளை எடுத்தனர்.

சிறப்பாக பங்கெடுத்துக்கொண்ட இருபால் தோழர்களில் முதல் பாதியில் நடைபெற்ற மூன்று வகுப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளூக்கு ஆதித்தியா லியனார்டோ டாவின்சி, மகாமதி, கமல்குமார், ஜெயக்குமார், இளங்கோவன், நெல்சன், திராவிடத்தென்றல் ஆகியோர் சரியான பதில்களைக் கூறி பொதுச்செயலாளர் வீ,அன்புராஜிடம் புத்தகங்களைப் பரிசாகப் பெற்றனர். இந்நிகழ்வை பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடிவேல் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். புத்தகங்களை சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்ரன் வழங்கி மகிழ்ந்தார்.

அதேபோலவே பிற்பகலில் நடைபெற்ற மூன்று வகுப்புகளில் இராகப் பிரியா, கோகுல்ராஜ், தமிழ்த்தென்றல், தொண்டறம், சிவபாரதி, திலகஜோதி ஆகியோர் சரியான பதில்களைக்கூறி, துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் புத்தகங்களை பரிசாகப் பெற்றனர்.  இறுதியில் திராவிடர் கழகத் தொழில்நுட்பக் குழுத்தலைவர் திருச்சி வி.சி.வில்வம் இணை
யத்தில் நாம் செயல்படவேண்டிய தேவைகளை விளக்கிப்பேசினார். இரவு உணவுக்குப் பிறகு பெரியார் திரைப்படம் திரையிடப்பட்டது.




No comments:

Post a Comment