புறநகர் ரயில்களில் விபத்துகள், உயிரிழப்பை தடுக்க தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும் ரயில்வே துறை அமைச்சருக்கு தயாநிதிமாறன் எம்.பி. கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

புறநகர் ரயில்களில் விபத்துகள், உயிரிழப்பை தடுக்க தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும் ரயில்வே துறை அமைச்சருக்கு தயாநிதிமாறன் எம்.பி. கடிதம்

சென்னை, ஜூன் 1  தொடர்ந்து ஏற் படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். 

மத்திய சென்னை நாடாளு மன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி  வைஷ்ன வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களாக சென்னை உள்ளூர் / புறநகர்/ பறக்கும் ரயில்களில் பயணிப்பவர்கள் விபத்துக்குள் ளாகி உயிரிழப்பது மற்றும் படு காயமடையும் செய்திகள் வந்த வண்ணம் இருப்பது மிகுந்த வருத்தத்திற் குரியதாகும். கடந்த மே மாதம் 27ஆம் தேதியிட்ட நாளிதழில் வெளிவந்த கட்டுரை யில், ஒன்றிய சென்னை தொகுதி யில் உள்ள மாநில கல்லூரியில் 2ஆம் ஆண்டு பொருளாதாரம் பயிலும் 19 வயது மாணவன் கல் லூரி முடிந்து வீடு திரும்பும் போது, வேப்பம்பட்டு மற்றும் செவ்வாய்ப்பேட்டை ரயில் நிலை யத்திற்கு இடையே மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார் என்றும், அவர் ரயிலின் படியில் பயணம் செய் தது தான் விபத்துக்கு காரணம் என்றும் காவல் துறையினர் கூறி யதாக அந்த செய்தியில் கூறப் பட்டுள்ளது.

அதேபோல், மீஞ்சூர் ரயில் நிலையத்தில், புறநகர் ரயிலில் ஏறும்போது தண்டவாளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் காயமடைந்ததாக கடந்த மே மாதம் 15ஆம் தேதி நாளிதளில் செய்தி வெளியிட்டுள்ளது. முன் னதாக மார்ச் மாதம், பெரம்பூர் மற்றும் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திற்கு இடையே செல்லும் புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து 19 வயது கல்லூரி மாணவன் இறந்து விட்டதாகவும், அவரது நண்பர் படுகாயமடைந்ததாகவும் செய்திகள் வந்தன. இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்வது முதல் முறை அல்ல. இதேபோல் கடந்த 2018ஆம் ஆண்டில் கூட சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்த போது பரங்கிமலை மேம்பாலத் தில் உள்ள இரும்பு தூணில் மோதி இருவர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த நாளே பரங்கி மலை ரயில் நிலையத்தில் படி யில் பயணம் செய்து வந்த 4 பேர் சுவரில் மோதி உயிரிழந்ததோடு, 7 பேர் படுகாயமடைந்தனர்.

புறநகர் ரயில்களில் இதுபோன்ற  விபத்துகள் மற்றும் உயிரிழப்பை தவிர்ப்பதற்கும், கூட்ட நெரி சலை தவிர்ப்பதற்கும் ரயில் பெட் டிகளில் தானியங்கி கதவுகள் பொருத்துவது தான் சிறந்த தீர் வாக இருக்கும் என்ற அடிப்படை யில், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி அன்றே, அன்றைய ரயில்வே துறை அமைச்சராக இருந்த பியூஸ் கோயலிடம் சென்னையின் அனைத்து உள்ளூர்/ புறநகர்/ பறக்கும் ரயில்களிலும் தானி யங்கி கதவுகள் அமைப்பது தொடர் பாக கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தேன். எனவே இப்பிரச் னையை கவனத்தில் கொண்டு சென்னையின் அனைத்து புற நகர் ரயில்களிலும் விரைந்து தானியங்கி கதவுகள் அமைத்து தந்து ரயில் பயணிகளின் பாது காப்பை உறுதி செய்வதோடு, அது குறித்த விழிப்புணர்வு பிரச் சாரங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவதோடு, இப்பிரச் சினைக்கான தீர்வை விரைந்து படுத்திடுவீர்கள் என நம்புகி றேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment