சென்னை,ஜூன்2- பெட்ரோல்,டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 4 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கடந்த 31.5.2022 அன்று அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் தடையை மீறி போராட்டம் நடைபெற்றதால் பாஜக மாநில தலைவர் அண்ணா
மலை உட்ளிட்ட 4 ஆயிரம் பேர் மீது இதச 143(சட்ட விரோதமாக கூடுதல்), 188 (அரசு அதிகாரியின் உத்தரவிற்கு கீழ்படியாமை), சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 41 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment