இனத்திற்கான ‘விடுதலை' ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

இனத்திற்கான ‘விடுதலை' ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,

மதுரை மாநகரில் ஜுன் 25 அன்று நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்டம் சிறப்பான வரலாற்று சாதனை படைத்துவிட்டது உள்ளபடி மட்டற்ற மகிழ்ச்சிக்கு அளவில்லை.

பெரியார் அவர்கள் காலத்தில் மதுரையில் நடை பெற்ற கருஞ்சட்டைப்படை மாநாடு பற்றி, செயலவைத் தலைவர், தமிழர் தலைவர்ஆசிரியர் அவர்கள் விரிவாக, தெளிவாக எடுத்துரைத்தது, இன்றைய தோழர்களுக்கு வியப்பூட்டும் செய்தியாகும். பொதுக் கூட்டமல்ல, பொதுக்குழு கூட்டம் சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பங்கு பெறும் பொதுக்குழுவில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று, அமைப்பு செயலாளர் வே. செல்வம், மாவட்ட செயலாளர் சுப. முருகானந்தம் ஆகியோர் விடுத்த அன்புவேண்டுகோளை தவிர்க்க இயலாமல், தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு, விடுப்பு எடுத்து பொதுக்குழுவில் கலந்து கொண்டு அறிவார்ந்த செய்திகளையும், களப்பணியின் இடையறாதுசெயல் பாடு பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. 

கழகத்தின் மூத்த நிர்வாகிகள், பேச்சாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என அனைவரையும் நேரில் கண்டு மகிழ்ந்திட்டது நினைவாக நிழலாடுகிறது. 

கழகத் தலைவர் அவர்கள் உரையும், தோழர் களிடம் நடந்து கொண்ட பாங்கும் , அய்யா அவர்களை கண்டிராத, அய்யாவின் பேச்சை செவிமடுக்காத இன்றைய தலைமுறையினருக்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது. ஒளிப்படம் எடுக்க வரும் ஒவ்வொரு வருக் காக எழுந்து நின்று, ஆசிரியர் அவர்கள் தோழர்களிடம் கனிவாக பேசியது வியப்பிற்குரியதாகும். 

' விடுதலை' ஆசியராக 60 ஆண்டுகள் பணி என்ற கின்னஸ் சாதனையாளருக்கு 60 ஆயிரம் 'விடுதலை' சந்தாக்களை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் போற்றத்தக்கது. 

துணைப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தமது உரையில் ஒரு லட்சம் சந்தாக் களை வழங்க வேண்டும் என்ற சிறப்பான கருத்தை முன்வைத்து தோழர்களின் பணியில் தொய்வின்றி செயல் பட வேண்டும் என மேலும் உணர்த்தியது அருமை. 

தொண்டு செய்து பழுத்த பழம் என்ற அய்யாவின் அடியொற்றி, ஆசிரியர் அவர்கள் 'விடுதலை' தமிழர் இல்லமெல்லாம், உள்ளமெல்லாம் அனைவரிடமும் பரவ வேண்டும், அது தான் தமக்கான பெரும் பணி என்ற ஆசிரியர் அவர்களின் கூற்றை, மெய்ப்பித்து வரலாறு படைக்க வேண்டும். 

'விடுதலை' நமக்கானது மட்டுமல்ல, இனத்திற் கானது என்ற பெருமையை காக்க களப் பணியில் வெல்வோம். 

 மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு விற்கு கழகத் தோழர்கள் குடும்பம் சகிதமாக வருகை தந்த அனைவரின் செவியும், வயிறும் நிறைந்தது. இயக்க நிகழ்வானது குடும்ப நிகழ்ச்சியாகவும், கொள்கை பிணைப்புகளின் மன மகிழ்வாகவும் அமைந்தது பெருமை.  திராவிடர் கழக மாநாட்டு பந்தலை தீயிட்டு கொளுத்திய   மதுரையில், அய்யா ஏற்றிய சுடரின் கனலாக நாங்கள் என்றும் இருப்போம் என உணர்த்தி விட்டது மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம். 

மக்களின் அறியாமையை போக்க 'விடுதலை' . அவர்களை அரியணையில் அமர்த்தவே 'விடுதலை'

சாதிப்பதே  'விடுதலை' வெல்வதே 'விடுதலை'.

- மு. சு. அன்புமணி, மதுரை


No comments:

Post a Comment