டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
பீகார் மாநிலத்தில், அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லீம் கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் (ஆர்ஜேடி) புதன்கிழமை இணைந்தனர். இதன் மூலம் மாநில சட்டப்பேரவையின் 243 உறுப்பினர்களில், 80 உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக ஆர்ஜேஆர்டி மாறியுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
குடியரசுத் தலைவர் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அல்ல. சிந்தித்து செயலாற்றுபவராக இருத்தல் வேண்டும் என்கிறார் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
அக்னிபாத் சேவைக்குப் பிறகு அக்னிவீரர்களை வேலைக்கு அமர்த்துமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டதற்காக மம்தா, ‘பாஜக ஊழியர்களுக்கு ஏன் வேலை கொடுக்க வேண்டும்?’ எங்கள் மாநிலத்தில் வேலை என்றால், எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு நாங்கள் கொடுப்போம்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தி டெலிகிராப்:
அயோத்தி கோயிலுக்கான நன்கொடை ரூ.5,500 கோடியைத் தொட்டுள்ளது என்று கட்டுமான அறக் கட்டளை தெரிவித்துள்ளது. இது மோடி அரசின் பள்ளி மதிய உணவு திட்டத்துக்கான பட்ஜெட்டில் பாதித் தொகை யாகும்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment