மானமிகு
சுயமரியாதைக்காரன் நீ!
எப்படி மறைவாய் நீ?
வானம் மறைவதுண்டா? - உம்
வரலாறும் அப்படித்தான்!
விண்மீன்களாய் ஜொலிப்பாய்!
விதையாய் விழித்துச் செழிப்பாய்!
விடுதலைக் குரலாய் ஒலிப்பாய்!
உம் மகன் மண்ணின்
மைந்தரானார் - மக்கள்
உள்ளத்தின் மணமுமானார்!
திராவிடம் வெல்லும் - உம்
ஒவ்வொரு சொல்லும்!
வாழ்க நீ எம்மான்
வற்றாத் திராவிட ஊற்றாய்!
- கவிஞர் கலி.பூங்குன்றன்
No comments:
Post a Comment