பகுத்தறிவுச் சிந்தனைகள் போலி சயன்ஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

பகுத்தறிவுச் சிந்தனைகள் போலி சயன்ஸ்

சு. ம. - மாட்டுச் சாணியை உருட்டிக் கொழுக்கட்டை போல் ஆக்கிச் சாமியாக வைத்துக் கும்பிடுகிறார்களே இதன் கார ணம் என்ன? அந்தச் சாணி நாற்றமடிப்ப தில்லை என்கின்ற காரணம்தானே?  

பார்ப்பான்:- ஓய், உமக்கென்னங்காணும் தெரியும்? பசுஞ் சாணியில் ஜர்ம்ஸ் (பூச்சி) களைக் கொல்லும் சக்தி இருக்கிறது ஓய்.

சு. ம. - இது எந்த டாக்டர் சொன்னார் உமக்கு? அல்லது இது எதிலிருக்கிறது?

பார்ப்பான்:- ஓய், ஓய் இந்தக் காலத்து டாக்டர்களை யெல்லாம் விட, இந்தக் காலத்து சைன்ஸ் புஸ்தகங்களை யெல்லாம் விட  அந்தக் காலத்துப் பெரியவாளும், சாஸ்திரங்களும் எவ்வளவோ மேலா னவை தெரியுமா? இதற்கெல்லாம் ஆதாரம் கேட்காதேயும்; இப்படிக் கேட்டவா வெகு பேருக்கு வாய் புளுத்துப் போய் விட்டது.

சு. ம. - ஓ ! ஓ ! அப்படியா? பகுத்தறிவில்லாத மாட்டுச் சாணிக்கே ஜர்ம்சைக் கொல்லுகிற சக்தி இருந்தால் அதைவிட உயர்ந்த பிறவியான பகுத்தறிவுள்ள மனுஷன் சாணிக்கு இன்னமும் என்ன என்னமோ சக்தி இருக்கலாமே! பின்னை அதை............

பார்ப்பான்:- சீச்சீ, நீர் என்ன சுயமரி யாதைக்காரராக்கும், உம்மிடம் யார் பேசு வார்!

கடவுள்

கேள்வி : கடவுள் எங்கே இருக்கிறார்? 

பதில் : முட்டாள்கள் உள்ளத்தில் இருக் கிறார்

கேள்வி : கடவுள் எப்போது ஏற்படுத்தப் பட்டார்?

பதில் : மக்கள் காட்டுமிராண்டிகளாய் முட்டாள்களாய் இருந்த காலத்தில்

கேள்வி : கடவுள் பக்தி எங்கே இருக் கிறது?

பதில் :  சிறிது பாகம் மடையர்களிடத் திலும், பெரும்பாகம் அயோக்கியர்களிடத் திலும் இருந்து வருகிறது!

கேள்வி : கடவுளை பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் பாடுபடுபவர்கள் யார்?

பதில் : சிறு அளவு மூடர்களும் பெரு மளவு பார்ப்பனர்களுமே தான் 

கேள்வி : நம் நாட்டில் கடவுளால் ஏற்பட்ட பலன் என்ன?

பதில் : ஜாதி உயர்வு ஜாதிப் பிரிவும் பார்ப்பனர் உயர்வும் அயோக்கியத்தன மான வாழ்வும் தான்.

மதம் 

கேள்வி : மக்கள் யாவரும் ஒன்றாக இணைய வேண்டுமானால் என்ன ஆக வேண்டும்?

பதில் : மதங்கள் ஒழிக்கப்பட்டாக வேண்டும்

இந்து மதம் 

கேள்வி: மக்கள் பகுத்தறிவாளர்களாக சமத்துவம் உள்ளவர்களாக மனிதாபி மானம் உள்ளவர்களாக ஒழுக்கம் நாணயம் நன்றி விசுவாசம் உள்ளவர்களாக ஆக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? 

 பதில் : இந்து மதம் என்னும் பார்ப்பன (ஆரிய) மதமும் அதன் சார்பு நூல்களும் (Ban) தடைசெய்யப்பட்ட வேண்டும்.

- சித்திரப்புத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் எழுதிய சிந்தனை துணுக்குகள்


No comments:

Post a Comment