புதுடில்லி, ஜூன் 30 அத்தியாவசிய மான பல்வேறு உணவுப்பொருட் களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பது என்று சண்டிகாரில் நடந்த சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "வருமானம் குறைதல், வேலைவாய்ப்பு குறைதல் ஆகிய வற்றுக்கு மத்தியில் விலைவாசி உயர்வு முதல் இடத்தில் உள்ளது. பிரதமரின் கப்பார் சிங் வரி, இப்போது கிரஹஸ்தி சர்வநாஷ் வரி ( குடும்பங்களை அழிக்கும் வரி) என்ற வலிமையான வடிவத்தை எடுத்துள்ளது" என கூறி உள்ளார். 'ஷோலே' படத்தில் கிராமங் களை கொள்ளையடிக்கும் கதாபாத் திரத்தின் பெயர் கப்பார் சிங், இந்தப் பெயரைத்தான் ஜி.எஸ்.டி.க்கு ராகுல் காந்தி பயன்படுத்தி வருகிறார். கொள்ளையடிக்கும் வரி, இப்போது குடும்பங்களை அழிக்கிற வரியாக உரு மாற்றம் பெற்றிருப்பதாக ராகுல் காந்தி சாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment