திருச்சி, ஜூன் 4 திருச்சி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இரா.மோகன்தாஸ் - கங்காதேவி இணையரின் மகன் மோ.அறிவுச்செல்வன், தூத்துக் குடி மாவட்டம், ஏரல் வட்டம் சொக்க பழங்கரை செ.உதயசூரியன் - செல்வி ஆகியோரின் மகள் உ.செல்லதங்கம் என்கிற சபிதா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா, திருவரங்கம் மூல தோப்பு, ஜி.எஸ்.ஆர்.கே. திருமண மண்டபத்தில் ஜூன் ஒன்றாம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இவ்விழாவிற்குத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் வரவேற் புரையாற்றினார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் விழாவினை ஒருங்கிணைத்து நடத்தினார்.
வாழ்க்கை இணைநல ஒப்பந்தம்
மோ.அறிவுச்செல்வன் - உ.செல்லதங்கம் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்தத்தை பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கி பேசும் போது, மணமக்களுக்கு பெரிதாக நாம் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. காரணம் தோழர் இரா.மோகன்தாஸ் சிறந்த இயக்கத் தோழர். நல்ல பகுத்தறிவாளர் அவரது மகன்கள் சிறப்பாக பெரியார் கொள்கை வழியில் வளர்த்துள்ளார். அந்த வகையில் அவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்பது நிச்சயம். தந்தை பெரியாரின் கொள்கை தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டு சிக்கனமாகவும் எளிமையாகவும் வாழ வேண்டும். மூடநம்பிக்கை, சாஸ்திர சம்பிரதாயம் இல்லாத இந்த திருமண முறையை தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அது இன்றைக்கு எவ்வளவு சிக்கனத்தை தந் துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த முறையை தான் நாம் எல்லோரும் பின்பற்ற வேண்டும். இந்த முறையில் ஏதாவது கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை பாருங்கள். எளிமை யாக இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறோம். இதுபோன்ற திருமணங்களை தமிழர்கள் நடத்திட வேண்டும் .எங்களை போன்றவர்களை அழைத்து நடத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. தங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அழைத்து இதுபோன்ற திருமண முறையை நீங்கள் நடத்தி னால் நிச்சயமாக நாம் சிக்கனமாக இதில் கடை பிடிக்கலாம்.
வாழ்க்கைத் துணைநலம் என்று இருந்த வந்த முறையை. வாழ்க்கை இணை நலம் என்று தற்போது செயல்படுத்தி வருகிறோம். இந்த அழைப்பிதழ் கூட வாழ்க்கை இணை நலம் என அச்சிடப்பட்டிருக்கிறது. வாழ்க்கை துணை நலத்திற்கும், இணை நலத்திற்கும் வித்தியாசம் என்னவென்றால் துணைநலம் என்பது நமக்கு ஒரு படி கீழே, இணைநலம் என்பது நமக்கு சமமானது. இணையானது. எனவேதான் ஆசிரியர் அவர்கள் இணை நலம் என்கிற திருமண முறையை உரு வாக்கினார்கள் அந்த வகையில் நீங்கள் இருவரும் சமமாக வாழ வேண்டும். சுயமரியாதை வாழ்க்கை முறையை சிறந்த முறை இந்த முறையை பின்பற்றி மணமக்கள் சிக்கனமாக வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன் இவ்வாறு பேசினார்.
முன்னதாக திருவரங்கம் வந்த பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களை கழகத் தோழர்கள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து திருவரங்கத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வாழ்த்துரை
அதைத் தொடர்ந்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்டம் வாழ்வை ஒன்றிய செயலாளர் நவீன் குமார், ஆர்.கே. .பி. திலீப் பிரதர்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கலந்து கொண்டோர்
முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது பள்ளி கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக் கூறினார்.
திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, பெரியார் வீரவிளையாட்டு கழகத் தலைவர் பேரா.சுப்பிரமணியம், தூத்துக்குடி திமுக பொறுப் பாளர் மோகன், செயற்குழு உறுப்பினர் சிவலிங்கம், நகர செயலாளர் ராம்குமார், சி.பி.அய்.சண்முகம், மக்கள் அதிகாரம் செந்தில், கோவன், ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட அமைப்பாளர் வெற்றி, கவுன்சிலர் லட்சுமிதேவி, எஸ்.என்.எஸ்.கேட்டரிங் ரங்கன், செம்புலிங்கம் மற்றும் மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் இளைய மகன் கரிகாலன், மகள் கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தார்கள் மற்றும் மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், லால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் மதிவாணன், குத்புதீன், பெல்.ம.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மகாமுனி, பீமநகர் பகுதி செயலாளர் முபாரக், திருவெறும்பூர் இளங்கோவன், வி.சி.வில் வம், லால்குடி மாவட்ட துணைத் தலைவர் அட்டலிங்கம், காட்டூர் சங்கிலிமுத்து, காமராஜ், ஆதித்தமிழர் பேரவை செங்கை குயிலி, மாநகர அமைப்பாளர் கனகராஜ், அண்ணாதுரை, திரு வரங்கம் நகரத் தலைவர் கண்ணன், மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா பால்ராஜ், மா.செந்தமிழினியன் உள்ளிட்ட கழக தோழர்கள் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிறைவாக மணமகன் தந்தையும் மாவட்ட செயலாளருமான இரா.மோகன் தாஸ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment