இந்தி எதிர்ப்பு மாநாட்டுச் சிந்தனை இந்தி-முயன்றார்-வென்றார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

இந்தி எதிர்ப்பு மாநாட்டுச் சிந்தனை இந்தி-முயன்றார்-வென்றார்!

ஜனவரி 25ஆம் நாள் (1990) இந்தி எதிர்ப்புப் போரில் உயிர்நீத்த மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாளாகும்!

25.1.1990 அன்று சென்னைத் தொலைக் காட்சி அறிவிப்பில், 2ஆவது ஒளி வழியின் நேரம் இன்று இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை நீட்டிக்கப் படும் தமிழ் நிகழ்ச்சிகள் இதனால் அதிக அளவில் இடம் பெற வாய்ப்பு கள் அதிகம் உண்டு என்று அறிவிக் கப்பட்டதில், 8.40-க்கு இந்திச் செய்தி அறிக்கை இடம்பெறும் என்று ஒளி பரப்பப்பட்டது! இதை நேற்று இரவே தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் கவனத்திற்கு நாம் இத் தகவலைக் கொண்டு சென்றோம்.

எதிலும் விரைந்து பணியாற்றிச் சாதனை புரியும் நம் முதல்வர் கலைஞர் அவர்கள், உடனே மத்திய செய்தி ஒலிபரப்புத் தகவல் துறை அமைச்சர், மாண்புமிகு உபேந்திரா அவர்களுடன் தொடர்புகொண்டு பேசியதன் பலன் - சென்னைத் தொலைக்காட்சியில் இரவு 11.40 மணிக்கு ஒளிபரப்பு முடியும் போதும், இன்று காலை 8.40'க்கு ஒளிபரப்பு முடியும் போதும்; 26.1.1990 முதல் இரவு 8.40-க்கு இந்தியில் செய்திகள் இடம் பெறாது என்று ஒளிபரப்பு செய்யப் பட்டது; அறிவிக் கப்பட்டது.

'எதிலும் விரைந்து செயல்படும் முதல்வர் இதிலும் விரைந்து செயல் பட்டதன் விளைவு - 8.40 மணி முதல் 8.55 மணி வரை அந்த நேரம் இரண் டாவது ஒளி வழியில் சென்னைத் தொலைக்காட்சியில் இனி தமிழ் நிகழ்ச்சிகளுக்கே கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. இந்தி எதிர்ப்புத் தியாகிகளுக்கு நம் முதல்வர் கலை ஞரின் ஆக்கரீதியான வீரவணக்கம் ஆகும் இது!

நம் முதல்வர் அவர்களையும், முதல் வரின் கருத்தை ஏற்றுச் செயல்பட்ட மத்திய அமைச்சர் திரு.உபேந்திரா அவர்களையும் தமிழ்நாடு பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

- கி.வீரமணி, 
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் 
(‘விடுதலை', 26.1.1990)


No comments:

Post a Comment